தெலுங்கில் கொடிகட்டிப் பறந்த சூப்பர் ஸ்டார் மரணம்...

தெலுங்கில் கொடிகட்டிப் பறந்த சூப்பர் ஸ்டார் மரணம்...

ஒரு காலத்தில் தெலுங்கு சினிமாவைப் பொறுத்தவரை, மக்கள் மனதில் இடம்பிடித்த நடிகர்களில் ஒருவராக கொடிகட்டிப் பறந்தவர் நடிகர் கிருஷ்ணா.

இதுவரையிலும் 350 திரைப்படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். 1975-85களில் தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர். இவர் நடித்த 'ராம் ராபர்ட் ரஹீம்' என்ற தெலுங்கு படத்தில் ரஜினிகாந்த் இவருடன் இணைந்து நடித்துள்ளார்.

telugu actor krishna
telugu actor krishna

தற்போது 79 வயதாகும் நடிகர் கிருஷ்ணாதான், தெலுங்கில் கொடிகட்டிப் பறக்கும் மாஸ் நடிகர் மகேஷ் பாபுவின் அப்பா என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சில நாட்களாகேவே உடல்நிலை குறைவாக இருந்துவந்த மூத்த நடிகர் கிருஷ்ணா, நேற்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நடிகர் கிருஷ்ணா இறந்துள்ளார்.

இத்தகவலை அறிந்த சினிமாத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், இச்சம்பவம் தெலுங்கு திரையுலகினரை பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com