தலைமுறை இடைவெளியைக் கூறும் 'சிக்லெட்ஸ்'

தலைமுறை இடைவெளியைக் கூறும் 'சிக்லெட்ஸ்'

தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, முன்னணி நட்சத்திர நடிகர்களான அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு, பிரபாஸ், வெங்கடேஷ் ஆகியோரின் படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர் சாத்விக் வர்மா, தமிழில் முதன்முறையாக கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும். 'சிக்லெட்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

'திறந்திடு சிசே' பட இயக்குநர் எம்.முத்துவின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'சிக்லெட்ஸ்.' இந்தப் படத்தில் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகரான சாத்விக் வர்மா கதையின் நாயகர்களில் ஒருவராக நடிக்கிறார். இவர் ‘பாகுபலி 1’ மற்றும் ‘எஃப் 3’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். ‘வலிமை’ படத்தில் நடித்திருக்கும் நடிகர் ஜாக் ராபின்சன் கதையின் மற்றொரு நாயகராக நடித்திருக்கிறார். நடிகைகள் நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹைதர், மஞ்சீரா ஆகியோரும் உடன் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஸ்ரீமன், மனோபாலா, சம்பத்ராம், சுரேகா வாணி, ஜானகி, மீனாள் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்துக்கு ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்த பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார். ‘வலிமை’ மற்றும் ‘துணிவு’ படப்புகழ் விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்புப் பணிகளை கவனிக்க,
கலை இயக்கத்தை ராஜு மேற்கொண்டிருக்கிறார். டீன்ஸ் டிராமா ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எஸ்.எஸ்.பி. ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஏ.ஸ்ரீனிவாசன் குரு, தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்று, தற்போது இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

''2கே கிட்ஸ் இளைஞர்களுக்கும், அவர்களுடைய பெற்றோர்களுக்கும் இடையே ஏற்படும் தலைமுறை இடைவெளியை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இதனால்தான் இப்படத்தின் டைட்டிலுடன் '2k கிட்ஸ்' என்ற டேக்லேனையும் இடம்பெற வைத்திருக்கிறோம். இந்தப் படத்தின் படபிடிப்பு தமிழகம், விசாகப்பட்டினம் மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடைபெற்றது'' என்றார் இந்தப் படத்தின் இயக்குநர்.

'சிக்லெட்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர்களின் தோற்றம், பின்னணியில் இடம் பெற்றிருக்கும் வண்ணங்கள் இளைய தலைமுறையின் எண்ணங்களை பிரதிபலிப்பதால் இளைஞர்களிடம் இது பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com