தளபதி 68 : டாப் கியரில் எகிறப்போகும் புரமோஷன் வீடியோக்கள்! பண்றது இவராச்சே...

தளபதி 68 : டாப் கியரில் எகிறப்போகும் புரமோஷன் வீடியோக்கள்! பண்றது இவராச்சே...

'லியோ' படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு - விஜய் கூட்டணியில் 'தளபதி 68' படம் உருவாகவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் அப்டேட்களும் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.

விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி இதுவே முதல்முறையாகும். அதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் புரமோஷன் வீடியோக்களை யார் கவனிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழ் பிக் பாஸ் 6வது சீசனில் வீட்டிற்குள் இருந்த ஒரு பிரபலம்தான் இதை செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

பிக் பாஸ் 6வது சீசனில், மூன்றே வாரங்கள் வீட்டிற்குள்ளிருந்து வெளியேறி, பின்னர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்தவர்தான் விஜே அபிஷேக் ராஜா. இவர் தற்போது திரைப்படங்களை விமர்சனம் செய்து வருகிறார்.

இவர் இயக்குநர் வெங்கட் பிரபுவின் நண்பராகவும் இருந்துவருகிறார். இவரது முந்தைய படங்களுக்கும் இவர்தான் புரமோஷன் வீடியோக்களை செய்துவந்தார். இந்நிலையில், தற்போது வெங்கட் பிரபுவின் படமான 'தளபதி 68' படத்திற்கும் இவர்தான் புரமோஷன் வீடியோக்களை செய்யவிருப்பதாக கூறப்படுகிறது.

முன்னதாக, ஒரு மேடையில் பேசிய அபிஷேக் ராஜா, வெங்கட் பிரபுவின் அடுத்த படத்திற்கு நான் வீடியோ செய்து கொடுப்பேன் எனவும் கூறியிருந்தார். இதையடுத்து, 'தளபதி 68' படத்திற்கான புரோமோஷன் வீடியோக்களை தரமாக செய்யவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இச்செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தைக் கிளப்பியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com