50வது திருமண நாளில் அம்மாவுடன் தளபதி விஜய் எடுத்துகொண்ட லேட்டஸ்ட் புகைப்படம்! உள்ளே...
நடிகர் விஜய், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் விஜய் பெற்றோரின் 50வது திருமண நாளையொட்டி, தனது தாயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் தற்போது 'லியோ' படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் கைகோர்த்துள்ள நிலையில், இப்படம் கேங்ஸ்டர் ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. தற்போது 'லியோ' படத்தின் ஷெட்யூல் சென்னையில் நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பாதிக் கட்டத்தைத் தாண்டிய நிலையில் விறுவிறுப்பாக அடுத்த கட்ட படப்பிடிப்பும் நடந்து வருகிறது.
லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 22 ஆம் தேதி, விஜய் பிறந்தநாளில் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் விஜய்க்கும் அவரது தந்தைக்கும் தகராறு இருப்பதாக சமீப காலமாக, தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் அதையும் தாண்டி, நடிகர் விஜய், 'வாரிசு' ஆடியோ வெளியீட்டு விழாவில் தனது தந்தை எஸ்ஏ சந்திரசேகரை நல்லபடியாக வரவேற்றார். விஜய்யின் அம்மாவும், தந்தை - மகன் உறவு குறித்தும் நல்லபடியான விளக்கத்தை அளித்திருந்தார். விஜய்க்கு எப்போதெல்லாம் நேரம் கிடைக்குமோ, அப்போதெல்லாம் தன்னுடன் நேரம் கழித்து வருவதாகவும் கூறியிருந்தார்.
இதையடுத்து, தற்போது விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகியோர் தங்களது 50வது திருமண நாளை கொண்டாடிய நிலையில், இந்த சிறப்பு நிகழ்வில் நடிகர் விஜய்யும் கலந்துகொண்டார்.

அதன்படி, நடிகர் விஜய் தனது தாயுடன் சேர்ந்து புகைப்படத்தை எடுத்துக்கொண்ட நிலையில், தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.