யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு பிரித்து மேயும் 'வாரிசு' படத்தின் 7 நாள் வசூல்! அதிகாரப்பூர்வ கலெக்ஷன் விவரம்!

யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு பிரித்து மேயும் 'வாரிசு' படத்தின் 7 நாள் வசூல்! அதிகாரப்பூர்வ கலெக்ஷன் விவரம்!

கடந்த 11ம் தேதி 'வாரிசு', 'துணிவு' என இரு பெரும் ஜாம்பவான்களின் படமும் உலகெங்கும் வெளியாகி கலவையான மற்றும் தரமான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. அதிலும் 'வாரிசு' படத்தின் வசூல் தற்போது அதிகரித்துவருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் ரசிகர்களும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதைத்தொடர்ந்து, தளபதி விஜய்யும் 'வாரிசு' படக்குழுவினருக்கு பிரபல நட்சத்திர ஹோட்டலில் சிறப்பு விருந்து அளித்துள்ளார். அதன் ஒருபகுதியாக சென்னையில், 'வாரிசு' படத்தின் succes meet நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தயாரிப்பாளர் தில் ராஜு, இயக்குநர் வம்சி, சரத்குமார், ஷாம், சங்கீதா உட்பட படக்குழுவினர் பலரும் பங்கேற்றனர்.

அவ்விழாவில் இயக்குநர் வம்சி பேசியபோது, 'நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என விஜய் அவர்களை கேட்டேன். அதற்கு அவரும் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார். இதுவே எனக்குபோதும் என உற்சாகமாக பேசினார்.

இதையடுத்து 'வாரிசு', 'துணிவு' இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியான நிலையில், ஆரம்ப நாட்களில் 'துணிவு' படம் வசூல் வேட்டையில் முதலிடத்தைப் பிடித்து வந்தது. இந்நிலையில் தற்போது விஜய்யின் 'வாரிசு' படத்திற்கு வழக்கமான வசூல் நடந்து வருகிறது. அதற்குக் காரணம் இப்படம் குடும்பப் பார்வையாளர்களின் ஆதரவைப் பெற்றதும் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் ட்விட்டர் பக்கத்தில் வசூல் குறித்த அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 'வாரிசு' திரைப்படம் ரிலீஸ் ஆகி 7 நாட்களில் 210 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து விஜய் ரசிகர்கள் இச்செய்தியை உற்சாகமாகப் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், 'வாரிசு' படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் விவரம் வெளியானதையடுத்து 'துணிவு' படத்தின் வசூல் விவரமும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com