முதல் படமே ஹாட் லிப்லாக்! வெளியானது அஜித் மகள் அனிகாவின் நடிப்பில் 'ஓ மை டார்லிங்' டிரைலர்!
'என்னை அறிந்தால்', 'விஸ்வாசம்' என அஜித் படத்தில் அவரது மகளாக நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவர்தான் குட்டி நயன் என்று செல்லமாக அழைக்கப்படும் அனிகா சுரேந்திரன். அதிலும் 'விஸ்வாசம்' படத்தில் கண்ணான கண்ணே பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கண்ணீரில் நனையச் செய்தது.
அதையடுத்து, மிருதன், மாமனிதன் உட்பட பல படங்களில் தங்கை, மகள் என கதாபாத்திரங்களில் நடித்துவந்தார். அதைத் தொடர்ந்து கதாநாயகியாக நடிப்பதற்காக அவ்வப்போது கிளமராக போட்டோஷூட் எடுத்தும் வந்த நிலையில், தற்போது மலையாளத்தில் முதன்முதலாக ஹீரோயினாக 'ஓ மை டார்லிங்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
ஆல்ஃப்ரெட் டி சாமுவேல் இயக்கியுள்ள இப்படத்தில் மெல்வின் ஜி பாபு என்பவருக்கு ஜோடியாக அனிகா நடித்துள்ளார். காதலை மையமாகக் கொண்ட ரொமாண்டிக்கான கதையம்சம் கொண்ட படமாக இது தயாராகி உள்ளது.
இந்நிலையில் நேற்று 'ஓ மை டார்லிங்' படத்தின் டிரைலர் ரிலீசான நிலையில், தற்போது அனிகாவை பற்றிய பேச்சுதான் சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அதற்கு காரணம் இந்த டிரைலரில் அனிகா லிப்லாக் காட்சிகளில் மிக நெருக்கமாக நடித்துள்ளதுதான். டிரைலரே இப்படியென்றால் படத்தின் மற்ற காட்சிகளில் எப்படியெல்லாம் கவர்ச்சியாக நடித்திருப்பாரோ என்ற கேள்விகள்தான் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.