மலரும் முன்னே உதிர்ந்த மலர் !

மலரும் முன்னே உதிர்ந்த மலர் !

வாய்தா படத்தில் நடித்த பௌலின் ஜெசிகா தற்கொலை செய்துகொண்டார் எனும் செய்தி நம்மில் பலரால் நம்ப முடியவில்லை.வாய்தா திரைப்படம் வெளியான நேரத்தில் நமது மங்கையர் மலர் நாளிதழு க்கு பேட்டி அளித்து இருந்தார். ஒரு கிராம பின்னணியில் இருந்து, சினிமா பின்புலம் இல்லாத குடும்பத்திலிருந்து  சென்னை வந்து தனியாக போராடி சிறிய ரோல்களில் நடித்து, வாய்தா படத்தில் நடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர். பேட்டியில் காதல் உட்பட பல்வேறு  அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.நல்ல தெளிவான சிந்தனையுள்ள பெண். தற்கொலைக்கு காதல் தோல்வி காரணம் என்று சொல்ல ப் படுகிறது. எந்த காரணமாக இருந்தாலும் தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல. பௌலின் ஜெசிகா ஆன்மா சாந்தி பெற பிராத்திப்போம்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com