செல்லப் பிராணிக்கு வந்த வாழ்வு... இன்ஸ்டாகிராமில் அக்கவுண்ட் உருவாக்கிய பிரபல ஸ்டார் நடிகர்!
ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து தரப்பினராலும் செல்லப் பிராணிகள் இன்றளவும் வளர்க்கப்பட்டு வருகிறது. நாம் தனிமையை உணரும்போதும் சரி, சந்தோஷமாக இருக்கும் நேரமானாலும் சரி, அரவணைத்து கொஞ்சி விளையாட செல்லப் பிராணிகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்ககப்படுகிறது.
அந்தவகையில் தெலுங்கு உலகின் பிரபல நடிகரான ராம் சரண், அவர் கொஞ்சி விளையாடும் செல்லப் பிராணிக்கு இன்ஸ்டாவில் தனி அக்கவுண்ட் உருவாக்கி ஒரு பெர்சனல் ப்ளாக்-காக அதை உருவாக்கி வருகிறார்.

ஒவ்வொருவரும் அவரவர்க்கென்று சமூக வலைதளங்களில் தனியாக அக்கவுண்ட் வைத்துக்கொண்டு தங்களைப் பற்றிய விஷயங்களை வெளியிட்டு பிரபலமாகி வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் ராம் சரண், வீட்டில் ரைம் என்ற செல்லப்பிராணி நாய் வளர்த்து வரும் நிலையில், அதனுடன் தான் கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள், அவரது மனைவி ரைமுடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் என அந்த இன்ஸ்டா அக்கவுண்டில் பதிவேற்றி வருகிறார்கள்.

நடிகர் ராம் சரண், படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் குடும்பத்துடன் இருப்பதோடு, ரைமுடனும் அதிக அக்கறை எடுத்து நேரத்தை செலவழித்து வருகிறார். இதை அவர் பதிவேற்றியுள்ள புகைப்படங்களே உணர்த்துகிறது.
சில தினங்களுக்கு முன், முதல்முறையாக ரைம் சர்வதேச பயணத்தை மேற்கொண்ட வீடியோவை ரைமின் அக்கவுண்டில் பதிவேற்றி உள்ளார்.
ரைமின் அக்கவுண்டை ராம் சரணும், அவரது மனைவி உபாசனா காமினேனியும் நிர்வாகித்து அவ்வப்போது ரைமின் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலோவர்கள் பின்தொடர்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.