படத்தின் வெற்றிக்காக திரைக்குப் பின்னால் பாடுபடும் படக்குழுவினர்! வியக்கவைத்த 'விடுதலை' படத்தின் மேக்கிங் வீடியோ!

படத்தின் வெற்றிக்காக திரைக்குப் பின்னால் பாடுபடும் படக்குழுவினர்! வியக்கவைத்த 'விடுதலை' படத்தின் மேக்கிங் வீடியோ!

Published on

கோலிவுட்டில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக கருதப்படுபவர் இயக்குநர் வெற்றிமாறன். இவரது படங்கள் என்றாலே அதற்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு இருக்கும். அந்தவகையில் இவரது அடுத்த படமான 'விடுதலை' இரண்டு பாகங்களாக உருவாகிவரும் நிலையில், முதல் பாகம் வருகிற 31ம் தேதி வெளியாகவிருக்கிறது.

கோலிவுட்டில் தற்போது வெளிவரவிருக்கும் படங்களில் இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், நடிகர் சூரி முதன்முறையாக இப்படத்தில் கதையின் நாயகனாக நடிக்க, விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவர்களைத் தவிர, கவுதம் மேனன், ராஜீவ் மேனன், பாலாஜி சக்திவேல் என அனுபவம் வாய்ந்த இயக்குனர்கள் பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நிலையில், இப்படத்தை, ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

3 நிமிட வீடியோவாக வெளியாகியுள்ள இந்த மேக்கிங் வீடியோவைப் பார்க்கும்போது, ஒவ்வொரு காட்சியும் எப்படி உருவாகிறது, இப்படத்தின் காட்சிகள் எவ்வளவு கடினமாக எடுக்கப்பட்டுள்ளது, நடிகர் சூரி எவ்வாறு தன்னை அர்ப்பணித்து ஆக்ஷன் காட்சிகளில் ஈடுபட்டுள்ளார் என்பதையும் இந்த வீடியோ தெள்ளத்தெளிவாக நமக்கு உணர்த்துகிறது. இதோ அந்த வீடியோ...

logo
Kalki Online
kalkionline.com