அடுத்த நடிகையைத் தாக்கிய புதிய நோய்!

அடுத்த நடிகையைத் தாக்கிய புதிய நோய்!

புதிய வகை நோய்த் தாக்குதல் என்பது தற்போது நடிகைகளுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வருவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னணி நடிகையான சமந்தா மயோசிடிஸ் என்னும் புதிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு சில மாதங்களாக அதனுடன் போராடி வருகிறார். அதை தொடர்ந்து, 'நெஞ்சிருக்கும் வரை' பட கதாநாயகி பூனம் கவுர் ஃபைப்ரோமியால்ஜியா என்ற நோயால் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து தற்போது இன்னொரு பிரபல நடிகையும் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் 'சிவப்பதிகாரம்' எனும் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மம்தா மோகன்தாஸ். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார். மலையாளத்தின் விருப்பமான நடிகை என பெயர் வாங்கியவ இவர் இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன், இவர் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து தைரியமாக போராடி, அனைவரின் தைரியத்தையும், தன்னம்பிக்கையும் உயர்த்திய நபராகவும் வலம் வந்தவர் மம்தா மோகன்தாஸ். தற்போது இவர் மீண்டும் வேறொரு தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.

தனது புகைப்படத்தை, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, அதில், தான் நிறமிழப்பு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதை ஆட்டோ இம்யூன் என்கின்ற தன்னுணர்வு நோய் என்றும் சொல்லி இருக்கிறார். முன்னதாக புற்றுநோயை எதிர்த்து தைரியமாக போராடி வந்த நிலையில், தற்போது புது பிரச்சினைக்கும் ஆளாகியுள்ளார்.

இந்த நோயின் தாக்கத்தால், தன்னுடைய முகத்தோற்றம் மாறிவிடுவதோடு, தனது நிறத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பல பிரச்சினைகளைக் கடந்து நடிக்க வந்த நிலையில், மீண்டும் இந்த புது நோய்த் தாக்குதலுக்கு நடிகை மம்தா மோகன்தாஸ் ஆளான நிலைவில், இத்தாக்குதலில் இருந்து விரைவில் குணமடைந்து மீண்டு வருவீர்கள் என ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com