அடுத்து பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் சர்ச்சைக்குப் பெயர் போன நாவல்! இயக்கப்போவது சசிகுமார்!

அடுத்து பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் சர்ச்சைக்குப் பெயர் போன நாவல்! இயக்கப்போவது சசிகுமார்!

காதல், டிராமா, சென்டிமெண்ட், ஆக்ஷன் என பல தரப்பில் கோலிவுட்டில் திரைப்படங்கள் வந்து ரசிகர்களைக் கவர்ந்தாலும், சமீப காலமாகவே புகழ்பெற்ற நாவல்களைப் படமாக்குவதில் இயக்குநர்கள் முனைப்பு காட்டிவருவதோடு மக்களிடையே வெற்றியும் பெற்று வருகிறது. அந்த வகையில் இயக்குநர் சசிகுமார் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இன்னொரு நாவலும் படமாக உள்ளது.

திரையுலகில் இயக்குநராகவும், பின்னர் பல படங்களில் நடிகராகவும் நடித்து மக்களிடையே பிரபலமானவர் சசிகுமார். 1999ல் 'சேது' படத்தில் விக்ரமின் நண்பராகவும் நடித்திருந்தார். அதேசமயம் அப்படத்தில் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார். அதைத் தொடர்ந்து 'மௌனம் பேசியதே', 'ராம்' படங்களில் இயக்குநர் அமீருடன் இணைந்து பணிபுரிந்துள்ளார்.

ஆனால் அவரை திரையில் வெளிச்சம் போட்டுக் காட்டியது 2008ல் வெளியான 'சுப்ரமணியபுரம்' திரைப்படம்தான். இப்படம் மாபெரும் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இந்தப் படத்தை இவர் இயக்கியதோடு, அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். பின்னர் 2010ல் 'ஈசன்' படத்தை இயக்கிய நிலையில், அதற்குப் பின் முழுநேர நடிப்பில் கவனம் செலுத்தி பல படங்களைக் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், 13 வருடங்களுக்குப்பின் மீண்டும் புகழ்பெற்ற நாவலான 'குற்றப்பரம்பரை' நாவலை படமாக்க இருக்கிறார். இதற்கு முன்னதாக இயக்குநர் பாலா, இயக்குநர் பாரதிராஜா இருவருமே இந்த நாவலை படமாக்க நினைத்து கடும் போட்டியும் நிலவி வந்தது. இதையடுத்து அது நடக்காமல் போக, பல மாதங்களுக்கு முன்பே சசிகுமார் இதை இயக்க இருப்பதாகவும் தகவல் அரசல்புரசலாக பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த தகவல் உறுதியாகியுள்ளது.

இந்த 'குற்றப்பரம்பரை' நாவல் வெப் தொடராக, 8 எபிசோட்களுடன் உருவாகவுள்ள நிலையில், 2 பாகங்களாக வரவிருக்கிறது. இப்படத்தை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தயாரிக்கவிருக்கிறார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் மற்றும் ராணா நடிக்க இருக்கிறார்கள். இச்செய்தி தற்போது உறுதியானதையடுத்து, அதற்கான அடுத்தகட்ட பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

சமீபகாலமாகவே நாவல்களை படமாக்குவது என்பது அதிகரித்து வரும் நிலையில், சர்ச்சையை கிளப்பி வந்த இந்த நாவலும் படமாகவிருப்பது ரசிகர்களிடையே ஆவலைத் தூண்டியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com