நயன்தாரா படத்துக்கு இசையமைக்கும் பின்னணி பாடகி! அது யாருன்னு தெரியுமா?
நயன்தாரா, மாதவன், சித்தார்த் மூவரும் சேர்ந்து நடிக்கும் புதிய படம்தான் 'டெஸ்ட்'. இப்படத்தை எஸ்.சஷிகாந்த் இயக்க YNOT ஸ்டூடியோ பேனரில், எஸ்.சஷிகாந்த் மற்றும் சக்ரவர்த்தி ராமசந்திரா இணைந்து தயாரிக்கும் நிலையில் இப்படம் 2023 இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது 'டெஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, சக்திஸ்ரீ கோபாலன் என்பவர்தான் 'டெஸ்ட' படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், இப்படத்தின் மூலம் இவர் முதன்முறையாக இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
இவர், முன்னதாக பின்னணி பாடகியாக வலம் வந்தவர். இவர் குரலில், 'நான்' படத்தின் 'மக்காயேல மக்காயேல...', 'கடல்' படத்தின் 'நெஞ்சுக்குள்ளே...', 'ராஜா ராணி' படத்தின் 'இமையே இமையே...', 'மெட்ராஸ்' படத்தின் 'நான் நீ...', 'விக்ரம் வேதா' படத்தின் 'யாஞ்சி... யாஞ்சி...', 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் 'அக நக...' உட்பல பல ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்.
இந்நிலையில் முதன்முதலாக இசையமைப்பாளரக அறிமுகமாகும் சக்திஸ்ரீ கோபாலனுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.