இயக்குனராக அறிமுகமாகும்  இயக்குனர் இமையத்தின் மகன்!

இயக்குனராக அறிமுகமாகும் இயக்குனர் இமையத்தின் மகன்!

Published on

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தை பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்குகிறார்.

மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகியுள்ள ’மார்கழி திங்கள்’. படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் இமையம் பாரதிராஜாவும் நடிக்கிறார்.

1999-ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'தாஜ்மகால்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா. இதைத்தொடர்ந்து, 'சமுத்திரம்','வருஷமெல்லாம் வசந்தம்', 'அல்லி அர்ஜுனா', உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான 'மாநாடு' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மனோஜ்-ன் தந்தையான , டைரக்டரும் நடிகருமான பாரதிராஜாவும் தற்போது பல படங்களில் நடித்து, தனது நடிப்பில் பட்டையை கிளப்பி வருகிறார்.

தற்போது மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'மார்கழி திங்கள்'. புதுமுகங்களை கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

படப்பிடிப்பை தொடங்கிய மார்கழி திங்கள் படக்குழு 'மார்கழி திங்கள்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டது இந்த நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பெரும் கவனம் ஈர்த்து வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com