விஜய் வீட்டு வாசலில் நின்று, கண்ணீருடன் கோரிக்கை வைத்த மாணவி!

விஜய் வீட்டு வாசலில் நின்று, கண்ணீருடன் கோரிக்கை வைத்த மாணவி!

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், விஜய் வீட்டு வாசலில் நின்று கதறி அழுதபடி கோரிக்கை வைத்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொழுதுபோக்கு அம்சங்களில் மக்களை பெரிதும் கவரக்கூடிய விஷயங்களில் முக்கியமாக பார்க்கப்படுவது சினிமா. அதிலும் திரையரங்குகளில் பெரிய திரையில் நமக்குப் பிடித்தமான நடிகர், நடிகைகள் நடிக்கும்போது, அதைப் பார்க்கும் நமக்குள் எதோ ஒரு புதுவித சிலிர்ப்பு ஏற்படும். அதிலும் பலருக்கு, அவர்களது நடிப்பு, மேனரிஸம் என அனைத்தும் பிடித்துப் போவதால், அவர்கள் மீதும் ஒரு கிரேஸ் ஏற்பட்டு அவர்களின் தீவிர ரசிகர்களாகவும் மாறிவிடுவர்.

அவ்வாறு திரையில் மட்டுமே பார்த்துவரும் அவர்களை என்றாவது ஒருநாள் நேரில் பார்க்கமாட்டோமா என்ற எண்ணம் ஒவ்வொரு ரசிகனுக்குள்ளும் இருக்கும்.

அந்தவகையில், சமீபத்தில், விஜய் அங்கிளை பார்க்கவேண்டும் என்று கெஞ்சிய குரலில் கேட்டு அழும் குழந்தையின் குரலுக்கு, செவி சாய்த்து, நடிகர் விஜய் மொபைலில் வீடியோ கால் செய்து அந்தக் குழந்தையை மகிழ்வித்தார்.

அதேபோல், விஜய் சேதுபதி அங்கிளை பார்க்க வேண்டும் என ஒரு குழந்தை கூற, அந்தக் குழந்தை விஜய் சேதுபதியை சந்தித்த வீடியோவும் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், தற்போது, காஞ்சிபுரத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், தேர்வு எழுதி முடித்த நிலையில், விடுமுறையில், சென்னையின் பல இடங்களை சுற்றிப் பார்க்க வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் அனைவரும் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் என்பதால், ஆர்வத்துடன் நீலாங்கரையில் இருக்கும் நடிகர் விஜய் வீட்டுக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் வீட்டு வாசலின் முன்பு, அங்கு இருந்த சிசிடிவி கேமராவைப் பார்த்தபடி நின்று கைகூப்பி வணங்கி, உருக்கமாகப் பேசியுள்ளார். அதில், ”தளபதியை பார்க்க, வீடு வரை வந்தோம். ஆனா உங்களை பார்க்க முடியலை. இதப் பாத்தீங்கன்னா, விஜய் அண்ணா கட்டாயம் எங்களைக் கூப்பிடுங்க. உங்களை பார்த்து ஒரேயொரு போட்டோ எடுக்கணும்... அவ்வளவுதான்” என்று அந்த மாணவி கெஞ்சியபடி கண் கலங்கி கூறியுள்ளார். அதோடு, இந்த வீடியோவை, நடிகர் விஜய் பார்வைக்கு செல்லும்வரை பகிருங்கள் எனவும் கோரிக்கை வைத்துளளார். இந்த வீடியோ அவரது பெற்றோரால், எடுக்கப்பட்டு இணையத்தில் வெளியான நிலையில், பல சமூகவலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஏற்கெனவே குழந்தையின் குரலுக்கு, உடனடியாக வீடியோ கால் மூலம் பேசி மகிழ்வித்த விஜய், தற்போது இந்த பள்ளி மாணவியின் கோரிக்கையை ஏற்று, அவரை வரவழைத்து அவருடைய புகைப்பட கோரிகையை நிறைவேற்றுவார் என்று நம்வுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com