ஷங்கர் இயக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியானது!

ஷங்கர் இயக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியானது!

ஷங்கர் என்றாலே பிரம்மாண்ட இயக்குநர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அவரது கூட்டணியில் தற்போது கமலின் 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், இயக்குநர் ஷங்கர், ராம்சரண் கூட்டணியில் 'RC 15' படதையும் இயக்கிவரும் நிலையில், இப்படத்தின் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் ராம்சரண் தெலுங்கு ரசிகர்களையும் தாண்டி, தமிழக ரசிகர்களாலும் கொண்டாடப்படுபவர். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'RRR' இந்திய அளவில் பிரம்மாண்ட வெற்றி பெற்றதோடு, அப்படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருதையும் தட்டிச் சென்றது. அதில் ஜூனியர் NTR, ராம் சரண் இருவரின் நடிப்பும் ரசிகர்களாகல் பெருமளவில் ரசிக்கப்பட்டது.

இந்நிலையில் ராம் சரண் நடிப்பில் அடுத்தபடம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகி வந்தநிலையில், தற்போது இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் ராம்சரண் நடித்துவருகிறார்.

இப்படத்தில் ராம்சரணுடன், நாயகியாக கியாரா அத்வானி நடிக்க, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை தில் ராஜூவின் ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்க, தமன் இசையமைக்கிறார்.

இந்நிலையில், அப்படத்தின் டைட்டில் இன்று வெளியாகியுள்ளது. ராம்சரணின் பிறந்தநாளான இன்று, டைட்டில் வீடியோவை தில் ராஜு தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். அதன்படி, 'RC 15' படத்தின் டைட்டில் 'கேம் சேஞ்சர்' என வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஷங்கரும் தனது ட்விட்டர் பக்கத்தில், ராம்சரணுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி, அந்த டைட்டில் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

மிகப்பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தில், நாயகன் ராம்சரண் ஐஏஎஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படும் நிலையில், சிறப்பான கதையமைப்புடன் இயக்குநர் ஷங்கர் இப்படத்தை இயக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இப்படம் குறித்து ஏற்கெனவே பல அப்டேட்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், தற்போது ராம்சரணின் பிறந்தநாளன்று டைட்டில் வெளியாகியுள்ளதையடுத்து, படம் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com