31 வயதில் உயிரிழந்த இளம் இயக்குநர்! இன்னும் சில வாரத்தில் அவரது படம் ரிலீஸ்! அதற்குள் நடந்த சோகம்!

31 வயதில் உயிரிழந்த இளம் இயக்குநர்! இன்னும் சில வாரத்தில் அவரது படம் ரிலீஸ்! அதற்குள் நடந்த சோகம்!

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பது பலரது கனவாகவே இருந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2004-ம் ஆண்டு 'ஐ ஆம் கியூரியஸ்' என்ற மலையாளத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்தான் ஜோசப் மனு ஜேம்ஸ்.

எல்லாரைப் போலவே, இவருக்கும் சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்ற கனவு இருந்தது. அதனால் மலையாளம் மட்டுமல்லாமல் கன்னடம் மற்றும் இந்தி படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியதில், பல முன்னணி இயக்குநர்களிடம் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு இருந்தது.

இதைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் ஒரு மலையாளப்படத்தையும் இயக்கி முடித்துள்ளார்.

அப்படத்தின் பெயர் 'நான்சி ராணி'. அஜு வர்கீஸ், அஹானா கிருஷ்ணா, லீனா, சன்னி வேய்ன், லால் உட்பட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ள நிலையில், படத்தின் இறுதிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்னும் சில வாரங்களில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

இதையடுத்து, சில நாட்களுககு முன், இயக்குனர் ஜோசப் மனு ஜேம்ஸ் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில், ஆலுவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அவரது இறுதிச்சடங்கு ஞாயிற்றுக்கிழமையன்று குருவிலங்காட்டில் நடைபெற்ற நிலையில், திரையுலகைச் சேர்ந்த அவரது நண்பர்களும் உறவினர்களும் கலந்துகொண்டு அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு முதல் படத்தையும் எடுத்து அதன் ரிலீஸ் இன்னும் சில வாரங்களில் இருக்கும் சூழ்நிலையில், அப்படத்தின் இயக்குநரான 31 வயதான ஜோசப் மனு ஜேம்ஸ் மரணமடைந்திருப்பது அப்படக்குழுவினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com