ஜெய் நடிப்பில் 'தீராக் காதல்'! பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

ஜெய் நடிப்பில் 'தீராக் காதல்'! பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

லைகா நிறுவனம் தயாரிப்பில், நடிகர் ஜெய் நடிக்கும் படமான 'தீராக் காதல்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

திரைத்துறையில், 2002ல் விஜய் நடிப்பில் வெளியான 'பகவதி' படத்தில் விஜய்யின் தம்பியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகர் ஜெய். அதைத் தொடர்ந்து, அவர் நடித்த படங்களில், 'சென்னை 600028', 'சுப்ரமணியபுரம்', 'வாமனன்', 'ராஜா ராணி', 'வடகறி' உட்பட பெரும்பாலான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளன.

கடந்தாண்டு அவரது நடிப்பில் 'வீரபாண்டியபுரம்', 'குற்றம் குற்றமே', 'எண்ணித் துணிக' உட்பட 5 படங்கள் வெளியான நிலையில், தற்போது 'தீராக் காதல்' படத்தில் 2 நாயகிகளுடன் சேர்ந்து நடிக்க உள்ளார்.

இந்நிலையில், காதல் கதையாக உருவாகவிருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, ரோகின் வெங்கடேசன் இயக்குகிறார். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்ய, சித்து குமார் இசையமைக்கிறார்.

நடிகர் ஜெய் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், இவருடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். நடிகை ஷிவதா 'நெடுஞ்சாலை', 'அதே கண்கள்' உட்பட பல மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com