இந்த வயதிலும் செம ஆட்டம் போட்ட ஜித்தன் ரமேஷின் அம்மாவா இது! வைரல் வீடியோ...
தமிழில் 'ஜித்தன்', 'மது', 'ஒஸ்தி', 'உங்கள போடணும் சார்' போன்ற படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுபவர் ஜித்தன் ரமேஷ். இவர் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியின் மகனும், நடிகர் ஜீவாவின் அண்ணனும் ஆவார்.
தமிழ், தெலுங்கு என நடித்தாலும், குறிப்பிட்ட படங்கள் மட்டுமே அவர் நடித்துள்ளார். இதையடுத்து, பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4ல் ஹவுஸ்மேட்டில் ஒருவராக கலந்துகொண்டு சில வாரங்கள் பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்தார்.
தந்தை ஆர்.பி.சௌத்ரி பிரபல தயாரிப்பாளர் என்ற அறிமுகத்தோடு, நடிகர் ஜீவா, ஜித்தன் ரமேஷ் இருவரும் கோலிவுட்டில் நுழைந்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு உச்சத்தை எட்டவில்லை.
ஜீவா இதுவரையிலும் 45 படங்களுககு மேல் நடித்து, அதில் பல படங்கள் வெற்றிபெற்றாலும், தற்போது பா.விஜய்-யின் ஒரு படம் மட்டுமே அவரது கைவசம் உள்ளது. அவரது அண்ணனான ஜித்தன் ரமேஷ் இதுவரையிலும், கிட்டத்தட்ட 10 படங்களிலேயே கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்நிலையில், ஜித்தன் ரமேஷ், தனது அம்மாவுடன் சேர்ந்து, ஜீவா நடிப்பில் வெளியான 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, ஜித்தனின் தாயார் இந்த வயதிலும் அழகாக நடனமாடுவதைக் கண்ட ரசிகர்கள் பலரும் அவரது ஆட்டத்தை ரசித்தபடி தங்கள் கமெண்ட்ஸ்களை பதிவிட்டும், இந்த வீடியோவை வைரலாக்கியும் வருகின்றனர்.