
மனிதனுக்கும், நாய்க்கும் இடையேயான அன்பை சொல்ல வருகிறது 777 சார்லி என்ற படம்! கன்னடத்தில் இதை கிரண்ராஜ் இயக்கி இருக்கிறார். அதேசமயம் தமிழ் உட்பட இந்திய மொழிகள் பலவற்றிலும் இப்படம் பேன் இந்தியா படமாக வெளியிடப்படுகிறது.
வாழ்க்கையில் பல விதங்களில் தோற்று, யாராலும் நேசிக்கபடாத ஒரு மனிதனின் வாழ்க்கையில் சார்லி என்ற நாய் வந்த பிறகு அவன் வாழ்க்கையே எப்படி நேசிப்புக்கு உள்ளாகிறது என்பதுதான் இந்த படத்தின் கதை! படத்தின் ஹீரோ சார்லி என்ற நாயை மைசூர், கோவா எனறு பல இடங்களுக்கு அழைத்துச் சென்று போட்டிகளில் பங்கேற்க வைக்கிறான்.
இந்த படத்தில் ஹீரோ ராக்ஸி ஷெட்டிக்கும் நாய் சார்லிக்கும் திரை கெமிஸ்ட்ரி சூப்பராக வொர்க்-அவுட் ஆகியிருக்கிறது. சார்லியின் அழுகை, அன்பு என நுட்பமான உணர்வுகளை அழகாக படம் பிடித்துள்ளார்கள். நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் ப்ரோமோத் என்ற பயிற்சியாளர் சார்லிக்கு பயிற்சி அளித்து உள்ளார்.
சென்னையில் நடைபெற்ற படத்தின் ப்ரோமோஷனுக்கு நாய் சார்லியையும் அழைத்து வந்திருந்தார்கள். சார்லியின் சுட்டித்தனமான செயல்பாடுகள் பார்வையாளர்களை கவர்ந்தது. குழந்தைகளுக்கான படங்களே அரிதாகி வரும் இந்த சூழலில் 777சார்லி அந்த குறையைப் போக்குகிறது.
குழந்தைகளையும் கவரக்கூடிய இந்தப் படம் அன்பை வலியுறுத்துகிறது!