பாலமுரளி நாத மஹோத்சவம் விருது!

பாலமுரளி நாத மஹோத்சவம் விருது!

லதானந்த்.

டாக்டர். எம். பாலமுரளி கிருஷ்ணாவின் 92 வது பிறந்த நாளையொட்டி சமீபத்தில் பாலமுரளி நாத மஹோத்சவம் விருது வழங்கும் நிகழ்ச்சியும் இசை நிகழ்ச்சியும் கோலாகலமாக நடைபெற்றது.

டாக்டர். எம். பால முரளிகிருஷ்ணா நினைவு அறக்கட்டளையுடன் பாரதிய வித்யா பவன் மற்றும் ssvm இன்ஸ்டிடியூஷன் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சியின் தொடக்கமாக பால முரளி கிருஷ்ணாவின் பிரதான சீடர்களான டாக்டர். கிருஷ்ணகுமார் மற்றும் திருமதி.பின்னனி கிருஷ்ணகுமார் குழு,  பால முரளி பஞ்ச ரத்ன கீர்த்தனைகளைப் பாடித் துவக்கி  வைத்தனர்.

இந்த விழாவில் இசை கலைஞர்கள் டாக்டர். டி.கே.மூர்த்தி (மிருதங்கம்), திரு.எம். சந்திரசேகரன் (வயலின்) மற்றும் திரு.விக்கு விநாயக ராம் (கடம்( ஆகியோருக்கு  'முரளி நாத லஹிரி' விருது மற்றும் தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப் பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கர்நாடக இசை உலகின் பல்கலை வித்தகர் Dr. T.V. கோபால கிருஷ்ணன் மற்றும் பாரதிய வித்யா பவன் இயக்குனர் திரு.கே.என்..ராமசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்குபெற்று, பாலமுரளி கிருஷ்ணாவுடனான நினைவுகளையும் அவரின் சிறப்புகளையும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டனர். இறுதியாக கிருஷ்ணகுமார் நன்றியுரை வழங்கினார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com