கார்கியாக மலர் டீச்சர்!

கார்கியாக மலர் டீச்சர்!

-ராகவ் குமார் 

பிரேமம் படத்தில்  மலர் டீச்சராக நடித்த  சாய் பல்லவியை தமிழ் ரசிகர்கள் மறக்க முடியாது. தெலுங்கில் இப்போது பிஸியாக நடித்து கொண்டிருக்கும் சாய் பல்லவி தற்சமயம் சூர்யாவின் 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் வழங்கும் கார்கி படத்தில் நடிக்கிறார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தை கெளதம் ராமசந்திரன் இயக்குகிறார். இந்த படத்தின் ட்ரைலர், போஸ்டர் பார்க்கும்போது இன்னொரு ஜெய்பீம் படமாக இருக்குமோ என்று நமக்கு கேள்வி வருகிறது. ஆனால் அப்படி இல்லை என்று பதில் தருகிறார் டைரக்டர்.

''நாம் செய்தித்தாள்களில் அன்றாடம் படிக்கும் நான்கு செய்திகளின் தொகுப்புகளை ஒரு கதையாக உருவாக்கி இருக்கிறேன்'' என்கிறார்.

''சரி.. இந்த படத்தில் சாய் பல்லவியின் நடிப்பு எப்படி?''

''ஒரு காட்சி எடுத்து முடித்ததும் நானே போதும் என்று நினைத்தால் கூட இன்னொரு டேக் பாக்கலாம் என்று சொல்லுவார் சாய் பல்லவி.  அந்த அளவுக்கு டெடிகேட்டாக வேலை செய்யும் நடிகை'' என்று சொல்கிறார்  டைரக்டர்.

இப்படத்தில் சுதா  என்ற திருநங்கையும் முக்கிய காதபாத்திரத்தில் நடித்து வருகிறார். படம் வெளியான பின்பு சுதாவின்  கேரக்டர் பேசப்படும் என்கிறது சினிமா வட்டாரம்.  இது போன்ற படங்களும்  டைரக்டர்களும் தமிழில் மாற்று சினிமாவுக்கான நம்பிக்கையை தருகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com