கர்ப்பிணி கெட்டப்பில் நடிகை கஸ்தூரி: ரசிகர்களுக்கு அதிர்ச்சி போட்டோஸ்!

 கர்ப்பிணி கெட்டப்பில் நடிகை கஸ்தூரி: ரசிகர்களுக்கு அதிர்ச்சி போட்டோஸ்!

நடிகை கஸ்தூரி தான் கர்ப்பமாக இருப்பது போன்ற இரு புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட, அவை பரபரப்பைக் கிளப்பியுள்ளன.

நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களில் சினிமா, அரசியல், விளையாட்டு, சின்னத்திரை, என எல்லா துறைகள் குறித்தும் தனது கருத்துக்களை பதிவு செய்து ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். மேலும் சினிமாக்களில் குணச்சித்திர வேடங்கள் மற்றும் ஐட்டம் டான்ஸ் ஆடுவது,  டிவி சீரியல்கள், வெப் சீரிஸ் என்று இப்போதும் பிஸியாக  இருக்கிறார்.

இந்நிலையில் நேற்று நடிகை கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கர்ப்பமாக இருக்கிற தோற்றத்துடன் ஒரு புகைப்படத்தை 'மீண்டும் கர்ப்பம்' என்று தலைப்பில் வெளியிட்டார். ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். இன்று அது குறித்து விளக்கமளித்துள்ளார் நடிகை கஸ்தூரி.

''நான் நிஜமாகவெல்லாம் கர்ப்பமாக இல்லை. இப்போது நான் தெலுங்கில் நடித்து வரும் 'மிஸ்டர். பிரக்னண்ட்" படத்தின் ஸ்டில் போட்டோக்கள்தான் அவை!'' என்று விளக்கமளித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. நேற்று கஸ்தூரி வெளியிட்ட அந்த கர்ப்பத் தோற்றத்திலான புகைப்படத்துக்கு ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com