நடிகர் நாசருக்கு கோல்டன் விசா; அமீரகம் கவுரவம்!

நடிகர் நாசருக்கு கோல்டன் விசா; அமீரகம் கவுரவம்!

தமிழ் சினிமா உலகில் பிரபலமானவர் நடிகர் நாசர், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள நடிகர் நாசருக்கு அந்நாட்டு அரசு கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது. இந்திய சினிமா துறை பிரபலங்கள் பலருக்கு இந்த விசா வழங்கப்பட்டு வந்தாலும், தமிழ் திரையுலகில் வெகு சிலரே இதனை பெற்றுள்ளனர். அந்த வகையில் நடிகர் நாசருக்கு இப்போது இந்த கோல்டன் விசா கிடைத்துள்ளது.

இதுகுறித்து நடிகர் நாசர் தெரிவித்ததாவது;

இந்த பெருமைக்குரிய கோல்டன் விசாவை எனக்கு அளித்ததற்கு அமீரக அரசுக்கு நன்றி. மேலும் எனக்கு இந்த விசா கிடைக்க ஏற்பாடு செய்த துபாய் வாழ் இந்திய தொழிலதிபர் வசிம் அதானுக்கும் நன்றி.

-இவ்வாறு நடிகர் நாசர் கோல்டன் விசா பெறும்போது குறிப்பிட்டார்

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com