இரட்டை ஆண் குழந்தைகள்
இரட்டை ஆண் குழந்தைகள்

நயன் விக்கி தம்பதிகளுக்கு இரட்டை ஆண் குழந்தைகள்!

விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இரு ஆண் குழந்தைகளுக்கு அப்பா அம்மா ஆகிவிட்டனர் என்கிற அறிவிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும், பிரபலங்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளன.

கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் இருவருக்கும் திருமணம் கோலகலமாக நடைபெற்றது.

லேடி சூப்பர் ஸ்டார் என திரையுலகமே கொண்டாடி வரும் நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் 9ம் தேதி தான் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் 2 ஆண்குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆகி உள்ளதாக இயக்குநர் விக்னேஷ் சிவனே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் .

நயன்தாரா விக்னேஷ் சிவன்
நயன்தாரா விக்னேஷ் சிவன்

திருமணமான நான்கு மாதங்களில் பிறந்திருப்பதால் வாடகை தாய் முறையில்குழந்தை பெற்றிருக்க அதிக வாய்ப்புள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இன்னும் நயன் விக்கி தம்பதியினரின் திருமண வீடியோ வெளிவராத நிலையில் குழந்தை பிறந்திருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது . இவர்களது திருமண வீடியோ நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தமாக வழங்கியுள்ளதாக தகவல் பரவலாக பேசப்பட்டு வந்துது குறிப்பிடத்தக்கது.

தற்போது திரையுலகினரும் பொது மக்கள் பலரும் நயன் விக்கி தம்பதிகளுக்குதங்கள் வாழ்த்தினை தெரிவித்து வருகிறார்கள்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com