
நடிகர் கவின் நடிப்பில் உருவாக உள்ள ஸ்டார் திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நடிகர் கவின். இவர் பீட்சா திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரை உலகிற்கு அறிமுகமானார். அதற்குப் பிறகும் சில படங்களில் முக்கியத் தோற்றத்தில் கவின் நடித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலம் அடைந்தார் நடிகர் கவின். இந்த நிலையில் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான டாடா திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்த தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார்.
டாடா திரைப்படம் வசூல் ரீதியான வெற்றியை பெற்றதை அடுத்து கவினுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வர தொடங்கின.இந்த நிலையில் பியார் பிரேமா காதல் திரைப்படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் உருவாகும் ஸ்டார் என்ற திரைப்படத்திற்கு நடிகர் கவின் கதாநாயகனாக ஒப்பந்தமானார்.
இந்தத் திரைப்படத்தில் நடிகர் கவினுக்கு ஜோடியாக ஆதிதி பொஹங்கர் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் ஒப்பந்தம் ஆகி உள்ளனர்.
இதுகுறித்து திரைப்படத்தின் இயக்குனர் இளன் தெரிவித்திருப்பது, ஸ்டார் திரைப்படத்திற்கான முதல் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் தேவைப்பட்டனர். இதற்காக ப்ரீத்தி முகுந்தன் முதலில் தேர்வு செய்யப்பட்டார். பிறகு ஆஷ்ரம் ஆகிய இணைய தொடர்களில் சிறப்பாக நடித்த ஆதிதி பொஹங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது இவருக்கு பொருத்தமான கதையாக இருக்கும் என்று நம்புகிறேன்.இளம் பெண் தோற்றம் என்பதால் புதுமுக நடிகை தேடிய போது ஆதிதி பொஹங்கர் தேர்வு செய்யப்பட்ட என்று குறிப்பிட்டுள்ளார்.