ஸ்ருதிஹாசன் நடித்த இரு படங்கள் ஒரே நாளில் வெளியீடு! 

ஸ்ருதி ஹாஸன்
ஸ்ருதி ஹாஸன்

ஸ்ருதிஹாசனின் நடிப்பில்  'வால்டேர் வீரய்யா' மற்றும் 'வீரசிம்ஹா ரெட்டி' என இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகவிருக்கின்றன. 

சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்திருக்கும் 'வால்டேர் வீரய்யா' என்ற திரைப்படத்திலும், பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகி இருக்கும் 'வீரசிம்ஹா ரெட்டி' என்ற திரைப்படத்திலும் நடிகை ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த இரண்டு திரைப்படங்களும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சங்கராந்தித் திருவிழா விடுமுறை தினத்தில் வெளியாகின்றன. ஒரே நாளில் அவர் நடிப்பில் தயாராகி இருக்கும் இரண்டு படங்களும் வெளியாவதால், அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.  

ஸ்ருதிஹாசன் தற்போது 'கே. ஜி. எஃப்' புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடிக்கும் 'சலார்' எனும் திரைப்படத்திலும், 'தி ஐ' எனும் ஹாலிவுட் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதில் நந்தமுரி பாலகிருஷ்ணா- கோபிசந்த் மலினேனி- மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாரான 'வீர சிம்ஹா ரெட்டி' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

ரிஷி பஞ்சாபி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்திருக்கிறார். பிரபல கதாசிரியர் சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுத, தேசிய விருது பெற்ற கலைஞர் நவீன் நூலி படத்தொகுப்புப் பணிகளைக் கவனிக்கிறார். ஆக்ஷன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவிசங்கர் தயாரித்திருக்கிறார்கள். ஏ.எஸ்.பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், சந்து ரவிபதி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்கள். 

வீரசிம்ஹா ரெட்டி
வீரசிம்ஹா ரெட்டி

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் லுக்கிற்கான மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் ஆகியவை வெளியாகியுள்ளன. 'வீர சிம்ஹா ரெட்டி' சங்கராந்தி விடுமுறையை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி வெளியாகிறது. 

சங்கராந்தி என்பது தெலுங்கு பேசும் மக்கள் கொண்டாடும் மாபெரும் திருவிழாவாகும். மேலும் சங்கராந்தி விடுமுறை தேதியில் வெளியான மாஸ் ஹீரோ பாலகிருஷ்ணாவின் பல திரைப்படங்கள் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி, தொழில் ரீதியாக மிக பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. இதன் காரணமாக பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகியிருக்கும் 'வீர சிம்ஹா ரெட்டி'யையும் எதிர்வரும் சங்கராந்தி விடுமுறையில் படக் குழு வெளியிடுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com