உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

கலகத் தலைவனாக உதயநிதி ஸ்டாலின்!

Published on

"கலகத் தலைவன்" தமிழ் ஆக்‌ஷன்-த்ரில்லர் வகையை சார்ந்த திரைப்படமாகும். உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால், கலையரசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்துள்ள "கலகத் தலைவன்" படத்தை தடம் படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கியுள்ளார்.

ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அரோல் கொரேல்லி இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்கள். கே. தில்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, என்.பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

திருமாறன்( உதயநிதி ) ஒரு நிதி ஆய்வாளராக பணியாற்றுகிறார். ஒரு கொடூரமான கொலையாளி தலைமையிலான மர்மமான கொடிய குழுவை எதிர்கொள்வதால், அவரது உலகம் தலைகீழாக மாறியது. அவர் அந்த சூழ்நிலையை எவ்வாறு கையாளுகிறார் என்பதே மீதிக்கதை சுழல்கிறது.

"கலகத் தலைவன்" திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் சாட்டிலைட் உரிமை கலைஞர் டிவிக்கு விற்கப்பட்டது. இப்படத்தை உதயநிதியின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

logo
Kalki Online
kalkionline.com