கணேஷ் வெங்கட்ராம் - பார்வதி நாயர்
கணேஷ் வெங்கட்ராம் - பார்வதி நாயர்

கபீர்லால் இயக்கத்தில் 'உன் பார்வையில்'! 

கபீர்லால் இயக்கத்தில் உருவாகியுள்ள தமிழ் திரைப்படம் ‘உன் பார்வையில்’.  பாலிவுட்டின் முன்னணி ஒளிப்பதிவாளர் கபீர்லால் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மராட்டி திரைப்படம்  ‘அதுர்ஷ்யா’, ரசிகர்களின் பேராதரவைப் பெற்றுப் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. IMDB தளத்தில் வெளியிடப்பட்டு,  உலக அளவில் 9.5 ஸ்டார் ரேட்டிங் சாதனை படைத்துள்ளது. அதை இயக்கிய கபீர்லால்  தமிழில் உருவாக்கியுள்ள திரைப்படம்தான் ‘உன் பார்வையில்! இந்தியாவின் பல மொழிகளில் 100 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் கபீர்லால் என்பது குறிப்பிடத்தக்கது.   

Lovely World Entertainment தயாரிப்பில்,  தமிழில் புதுமையான க்ரைம் திரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகியுள்ளது.  நடிகை பார்வதி நாயர் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  

படக்குழுவினர்
படக்குழுவினர்

திடீரெனக் கொல்லப்பட்ட  தமது தங்கையின் மரணத்துக்கு யார் காரணம் எனக் கண் பார்வையற்ற  நாயகி தேட ஆரம்பிக்கிறாள். அவளின் தேடலும், அதைத் தொடர்ந்து நடக்கும் மர்மமான சம்பவங்களும்தான் கதை.   

ரசிகர்களை இருக்கை நுனியில் வைத்திருக்கும் அளவுக்கு விறுவிறுப்பான திரைக்கதையோடு அட்டகாசமாக உருவாகியுள்ள இப்படத்தில் கணேஷ் வெங்கட்ராம், நாயகி பார்வதி நாயரின் கணவராக நடித்திருக்கிறார். உளவியல்  மருத்துவர் பாத்திரம் இவருக்கு. மேலும் நிழல்கள் ரவி, துளசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இன்ஸ்பெக்டராக தயாரிப்பாளர்  அஜய் குமார் சிங் நடித்துள்ளார். இவர்களுடன் இந்திய திரையுலகின் பல முன்னணி நடிகர்கள் பலர் இணைந்து நடித்துள்ளனர். 

இதர பணிகள் அனைத்தும்  முடிக்கப்பட்ட நிலையில்,  வெளியீட்டுப் பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com