தலைகீழாக நிற்கும் ஜோதிகா! ஒருவேள இதுக்காக இருக்குமோ...

தலைகீழாக நிற்கும் ஜோதிகா! ஒருவேள இதுக்காக இருக்குமோ...

சினிமா உலகில் தனக்கென ஒரு அடையாளத்தைப் பிடித்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஜோதிகா. இவர் 1998ல் 'டோலி சஜா கி ரக்னா' என்ற இந்தி படத்தின் மூலம் திரையில் வந்தாலும், 'வாலி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர்.

'உயிரிலே கலந்தது' படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்தபின் அவருடன் ஏற்பட்ட காதல், பின்னர் திருமண வாழ்கையாக மாற, தியா, தேவ் என்ற இரு பிள்ளைகளுடன் குடும்பமாக அழகான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

குடும்ப வாழ்க்கை வந்தாலும், அவ்வப்போது தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களிலும் நடித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து சமீபத்தில் நடிகர் சூர்யா மும்பையில் வீடு வாங்கி குடும்பத்துடன் செட்டில் இருக்கிறார் என்ற செய்தியும்கூட வெளியானது. இதையடுத்து, நடிகை ஜோதிகா தற்போது 'ஸ்ரீ' என்ற இந்தி படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில், ராஜ்குமார் ராவ் கதாநாயகனாக நடிக்க, முக்கிய ரோலில் ஜோதிகா நடிக்கிறார்.

இந்நிலையில், நடிகை ஜோதிகா தலைகீழாக நின்று ஒர்க்கவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். திருமணமாகி இத்தனை வருடத்திற்குப் பின் ஜோதிகாவின் தெறிக்கவிடும் இந்த ஒர்க்கவுட் எதற்காக என்றுதான் தெரியவில்லை. ஒருவேளை தற்போது நடிக்கும் படத்திற்காகத்தான் இவ்வாறு தலைகீழாக நின்று ஒர்க்கவுட் செய்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

தலைகீழாக ஜோதிகா ஒர்க்கவுட் செய்வதைக் கண்ட ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்தில் மூழ்கி இருக்கின்றனர். இதோ அந்த வீடியோ...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com