ஒரே நாளில் வசூலில் கலக்கும் "வாத்தி"!

ஒரே நாளில் வசூலில் கலக்கும் "வாத்தி"!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on: 

தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழியில் நேற்று வெளியான வாத்தி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குநர் வெங்கி அட்லூரி முதன் முறையாக தனுசை வைத்து வாத்தி என்ற படத்தை இயக்கி உள்ளார். இதில், சம்யுக்த்தா, சமுத்திரக்கனி, சாய்குமார், தனிக்கெல்லா பரணி, கென் கருணாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள, படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழியில் ஒரே நேரத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. வாத்தி படத்தில் தனுஷ் ஆசிரியராக நடித்து பட்டையை கிளப்பி உள்ளார். தனுஷ் நடிக்கும் நேரடியான தெலுங்கு திரைப்படம் இதுவாகும். ஜிவி பிரகாஷின் அட்டகாசமான இசையில் 'ஒருதல காதலை தந்த' பாடல் படம் வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்கள் பேவரைட் லிஸ்டில் வந்துவிட்டது.

படத்தின் கதை, சமுத்திரக்கனி நடித்த சாட்டை,ஜோதிகா நடித்த ராட்சசி என இதே போன்று பல திரைப்படங்களை பார்த்து பார்த்து சலித்துப்போன நமக்கு தனுஷின் நடிப்பு மட்டுமே ஆறுதலாக உள்ளது. சினேகா கீதம், மிஸ்டர் மஜ்னு, ரங் தே, தோலி பிரேமா ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் வெங்கி அட்லூரி தனுசை வைத்து இந்த படத்தை இயக்கி உள்ளார். இப்படத்திற்கு தமிழில் வாத்தி என்றும், தெலுங்கில் ‘சார்‘ என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

நேற்று திரையரங்கில் வெளியான இத்திரைப்படம் முதல் வசூல் குறித்த தகவல்வெளியாகி உள்ளது. தமிழ்நாடு 8 கோடியும், தெலுங்கில் 3 கோடியும், கர்நாடகாவில் 1.5 கோடியும் வெளிநாடுகளில் 1.5 கோடி என ஆக மொத்தம்உலகளவில் 14 கோடி வசூலாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்றும் நாளையும் வார விடுமுறை என்பதால், வாத்தி படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com