தி வாக்சின் வார்
தி வாக்சின் வார்

11 மொழிகளில் வெளியாகும் வேக்ஸின் வார்! 

‘தி காஷ்மீரி பைல்ச்’ படத்தைத் தயாரித்த விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரியின் அடுத்த படைப்பு 'தி வாக்சின் வார்' என்கிற திரைப்படம். இந்த படம் பல்லவி ஜோஷியின் புரொடக்ஷன்ஸ் கீழ் தயாரிக்கப்பட்டு, அடுத்த வருடம் ஆகஸ்ட் 15-ம் தேதி 11 மொழிகளில் வெளியாகிறது. 

இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரியின் கடைசித் திரைப்படமான 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது.

இப்படம் அந்த வருடத்தில் அதிக வசூல் செய்த இந்தித் திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது. சமீபத்தில், விவேக் அக்னிஹோத்ரி தனது அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பை கொடுத்து மக்களின் கவனத்தை ஈர்த்தார், படத்தின் தலைப்பு குறித்த யூகத்தை  மட்டும் கொடுத்துவிட்டு நெட்டிசன்களை அதற்கு கருத்து கூற வைத்தார். இந்த புதுமை பலரது கவனத்தையும் ஈர்த்தது. 

இப்போது ரசிகர்களின் அனைத்து காத்திருப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இயக்குனர்  தனது அடுத்த படத்தின் தலைப்பாக 'தி வாக்சின் வார்' என்ற பெயரை அறிவித்துள்ளார்.

'தி வாக்சின் வார்' திரைப்படம் நாட்டில் கோவிட்-19 மற்றும் தடுப்பூசி பற்றியதாக இருக்கும் என்பது படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் மூலம் தெரிகிறது. போஸ்டரில் கோவிட் தடுப்பூசி அடங்கிய மருந்து குப்பி ஒன்றைப் பார்க்கலாம்.

மேலும் அதில் : “A war you didn’t know you fought. And won.” அதாவது நம்  கண்ணுக்கு தெரியாமல் வந்த போரை போராடி வென்ற கதை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆகஸ்ட் 15, 2023 சுதந்திர தினத்தன்று இப்படம் வெளியாகுமென்ற என்ற செய்தியுடன் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. 

11 மொழிகளில்
11 மொழிகளில்

இப்படம் இந்தி, ஆங்கிலம், குஜராத்தி, பஞ்சாபி, போஜ்புரி, பெங்காலி, மராத்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், உருது மற்றும் அசாமி உள்ளிட்ட 11 மொழிகளில் வெளியாகவுள்ளது. . 

இப்படம் குறித்து  தயாரிப்பாளர் பல்லவி ஜோஷி கூறியதாவது:  

“இந்தப் படம் நமது நாட்டின் சிறந்த உயிரியல் விஞ்ஞானிகளின் வெற்றியைக் கொண்டாடுகிறது. தடுப்பூசிப் போருக்காக அவர்கள் செய்த தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு நாம் செலுத்தும் ஒரு அர்பணிப்பாக இந்த திரைப்படம் இருக்கும்."  

தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்காக விவேக் அக்னிஹோத்ரியுடன் இணைந்த அபிஷேக் அகர்வால் நாடு முழுவதும் ‘தி வாக்சின் வார்’ படத்தை வெளியிடுகிறார். 

படத்தில் நடிக்கும் நடிகர்கள்  பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும்.  

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com