காட்டுத்தீ போல் பரவும் வாரிசு படப்பிடிப்பு வீடியோஸ்... சுதாரித்துக்கொண்டு விஜய்யுடன் ஹைதராபாத்துக்கு பறக்கும் வம்சி படக்குழுவினர்!

காட்டுத்தீ போல் பரவும் வாரிசு படப்பிடிப்பு வீடியோஸ்... சுதாரித்துக்கொண்டு விஜய்யுடன் ஹைதராபாத்துக்கு பறக்கும் வம்சி படக்குழுவினர்!

தளபதி விஜய் நடிப்பில் கடந்த தமிழ்ப்புத்தாண்டு அன்று 'பீஸ்ட்' படம் வெளியானதைத் தொடர்ந்து அடுத்து 'வாரிசு' படம் திரையில் வரவிருக்கிறது. இப்படத்தை வம்சி இயக்குகிறார். விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் உட்பட பல பிரபலங்களும் நடித்துள்ளனர்.

முன்னணி நடிகர்களின் படங்கள் என்றாலே வருடத்திற்கு ஒரு படம் என்கிற ரீதியில் திரையரங்குகளில் இறங்குவதால், அப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருக்கும்.

அந்தவகையில் 'பீஸ்ட்' திரைப்படத்தைத் தொடர்ந்து 'வாரிசு' திரைப்படம் பொங்கல் அன்று உலகம் முழுவதும் வெளியாகவிருப்பதால், இப்போதே ரசிகர்கள் அதைக் கொண்டாடி வருகின்றனர்.

'வாரிசு' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமீபகாலமாக அப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோஸ் என வெளியாகி காட்டுத்தீ போல் பரவி வருவதால், படக்குழுவினர் அதிர்ந்து போய் உள்ளனர். இதனால் படத்தின் முக்கிய பகுதியாக கருதப்படும் க்ளைமாக்ஸ் காட்சிகளை இங்கு எடுக்கவேண்டாம் என கருதி விஜய்யுடன் வம்சி குழுவினர் ஹைதராபாத்திற்கு கிளம்ப திட்டமிட்டுள்ளனர்.

புகைப்படங்கள் லீக் ஆனதைத் தொடர்ந்து இதை வைத்து கதையை கணிக்கவும் வாய்ப்பு இருக்கலாம் என கருதி சில காட்சிகளை மாற்றி, திரும்பவும் எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், 'வாரிசு' திரைப்படம் இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் 400 கோடி ரூபாய் அளவில் வியாபாரம் ஆகியிருப்பதால், மேற்கொண்டு, 'வாரிசு' படம் குறித்த வீடியோவோ, புகைப்படங்களோ எதுவும் வெளிவராதபடி ஹைதராபாத்தில் பாதுகாப்பாக காட்சிகளை எடுத்து முடிக்கவேண்டும் என்பதிலும் படக்குழுவினர் உறுதியாக இருப்பதாக அறியப்படுகிறது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com