வனிதா விஜயகுமாரின் 3வது கணவர் அதிர்ச்சி மரணம்!
நடிகை வனிதா விஜயகுமாரின் முன்னாள் கணவரான பீட்டர் பால், திடீரென உடல்நலக் குறைவால் மரணமடைந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழ்த்திரையுலகில் ஒருசில படங்களில் நடித்திருந்தாலும், பிரபல தொலைக்காட்சியில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பிரபலமாக அறியப்பட்டவர் வனிதா விஜயகுமார். அதன்பின்னர் சொந்தமாக யூ-ட்யூப் சேனல் நடத்தி வருவதோடு, பல யூ-ட்யூப் சேனல்களில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார்.
இவர் ஏற்கெனவே இரண்டுமுறை திருமணமாகி விவாகரத்தான நிலையில், கடந்த 2020ம் ஆண்டு விஷுவல் எபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்திற்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும், ஒருபக்கம் எதிர்ப்புகளும் கிளம்பின. பின்னர் வனிதாவின் இந்த திருமண வாழ்க்கையிலும் பல பிரச்சனைகள் புகுந்து விளையாடிய நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இந்த திருமண வாழ்க்கையும் முடிவுக்கு வந்து இருவரும் பிரிந்தனர்.
தனது மூன்றாவது திருமணமும் முடிவுக்கு வந்ததால், பெரும் மனஉளைச்சலுக்கு ஆனாலும், வனிதா விஜயகுமார் அதிலிருந்து வெளிவந்து மீண்டும் பிசினஸ், ரியாலிட்டி ஷோ என பரபரப்பாகவே இயங்கி வருகிறார்.
இதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாகவே உடல் நலம் சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படும் பீட்டர் பால், தற்போது மரணமடைந்துவிட்டதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.