திருமண நாளில் நயன்தராவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விக்கி! சந்தோஷத்தில் அழுத நயன்!
தமிழ்த்திரையுலகில் மிகப் பாப்புலரான ஜோடியா வலம் வருவது நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடிதான். பல ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் 9-ம் தேதி விமரிசையாக திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களுக்கு உயிர் மற்றும் உலகம் என இரண்டு குழந்தைகளும் உள்ளனர். குடும்ப வாழ்க்கையை சந்தோஷமாகக் கழித்துவரும் இருவரும், குடும்ப நலனுக்காகவும், பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும், விக்னேஷ் சிவன் குடும்ப கோவிலுக்கும் இருவரும் சென்று வந்தனர்.
இதையடுத்து, தற்போது நயன்தாரா சினிமாவிலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இருவரும் தங்கள் திருமண நாளை சிறப்பாக கொண்டாடினர்.

அதன் ஒருபகுதியாக தங்கள் குழந்தைகளின் முகத்தை ரசிகர்களுக்கு காண்பித்ததோடு, இரு மகன்களும் தங்களுக்கு திருமண நாள் வாழ்த்து கூறும்விதமான புகைப்படம் ஒன்றையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் விக்னேஷ் சிவன் பதிவிட்டிருந்தார்.

அதுமட்டுமல்லாமல், தனது மனைவி நயன்தாராவுக்கு திருமண நாளில் சர்ப்ரைஸ் கொடுக்கும்விதமாக, வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் விக்னேஷ் சிவனுக்கு நெருக்கமான நவீன், தனது புல்லாங்குழலில், விக்னேஷ் சிவன், நயன்தாரா படங்களின் பாடலை வாசித்தபடி, விக்கி-நயன் இருக்கும் இடத்தை நோக்கி வருகிறார். அங்கு அவர்களுடைய நண்பர்களும் சுற்றி இருக்கின்றனர்.
நவீன் புல்லாங்குழலில் அந்த பாடல்களை இசைத்தபடி வருவதை சற்றும் எதிர்பார்க்காத நயன்தாரா, அதைக் கேட்டதும், உடனே எமோஷனலாகி விக்கியின் தோள் மீது சாய்ந்து உணர்ச்சிவசப்பட்டு அழ ஆரம்பித்துவிட்டார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.