வித்யா பாலனின் புதுப்படம்!

வித்யா பாலனின் புதுப்படம்!

பாலிவுட் பூமராங்!

மும்பையைச் சேர்ந்த, பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை வித்யா பாலன் ஆரம்பத்தில் மலையாளம், தமிழ் மொழிகளில் நடிக்க முயற்சி செய்தபின், பெங்காலி படமொன்றில் நடித்து பேர் பெற்று, பாலிவுட்டிற்குச் சென்றார்.

கமர்ஷியல் படங்களில் நடிப்பதைவிட கதைக்கு முக்கியத்துவம். அதிலும் குறிப்பாக, நாயகிக்கு முக்கியத்துவமுள்ள கேரக்டர்களில் நடித்து புகழ் பெற்றார். சில்க் ஸ்மிதாவாக, ‘தி டர்ட்டி பிக்சர்ஸ்’ படத்தில் நடித்து, அந்த ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.

இந்தியாவின் விஞ்ஞான சாதனையான மிஷன் மங்கள் ராக்கெட் ஏவப்பட்டது தொடர்பான படமான ‘மிஷன் மங்கள்’ படத்தில், ‘தாரா ஷிட்னே’ என்கிற விஞ்ஞானியாக வித்யா பாலன் நடித்தார். பின்னர் ‘சகுந்தலாதேவி’ வாழ்க்கை வரலாற்றுப் படம்; காட்டிலாகா அதிகாரியாக, ஆக் ஷன் ஹீரோயினாக நடித்த ‘ஷெர்னி’ மற்றும் ‘ஜல்சா’ படங்கள், கொரோனா காலத்தில் ஓடிடி தளங்களில் வெளியானது. தற்போது, அனுமேனன் இயக்கத்தில் ‘நீயத்’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். ஸஸ்பென்ஸ், திரில்லர் படமான இதில் விசாரணை அதிகாரியாக
வித்யா பாலன் நடித்துள்ளதாகவும், ஜூலை 7ஆந் தேதி தியேட்டர்களில் வெளியாவதாகவும் கூறப்பட்டுள்ளது.

சுமார் 4 வருடங்களுக்குப் பின் தியேட்டரில் வெளியாகும் வித்யா பாலன் படம் என்பதால், நல்ல வரவேற்பை எதிர்பார்க்கிறது.

‘சிட்டாடல்’ வெப் தொடர்! (ஆங்கிலம்)

லா 40 நிமிடங்கள் கொண்ட 6 எபிசோடுகள் ஆன ‘சிட்டாடல்’ வெப் தொடர் அமேசான் பிரைம் வீடியோவில் (ஆங்கிலம்) வெளியாகி இருக்கிறது.

உலக முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஸ்பை திரில்லர் தொடரில், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்திருப்பதால், அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது ‘சிட்டாடல்.’

ஜேம்ஸ்பாண்ட் படங்களின் பாணியில் ஆக் ஷன்; சேசிங்; விறுவிறுப்பு என பல. பிரியங்கா சோப்ரா செமையாக சண்டை போடுவதோடு கிளாமரும் காட்டுகிறார். ரிச்சர்ட் மடன் தனது குடும்பத்துக்காகப் போராடும் தந்தை மற்றும் ஸ்பை ஆகிய 2 கதாபாத்திரங்களிலும் சூப்பராக நடித்துள்ளார்.

உலக அளவிலான ‘சிட்டாடல்’ என்கிற உளவு நிறுவனம் பொதுவானதாகும். இதில் பணியாற்றுபவர்கள், உலக மக்களுக்கு எங்கு தீங்கு நடந்தாலும், அதைத் தடுக்க உடனே சென்று போராடுவார்கள். ‘மோண்டிகோர்’ என்கிற அமைப்பு கோட்டீஸ்வரர்களால் உருவாக்கப்பட, இது ‘சிட்டாடல்’ ஐ அழித்து விடுகிறது. சிட்டாடலின் Top Agentகளான ரிச்சர்ட் மடன், பிரியங்கா சோப்ரா உயிர் தப்பினாலும் வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு நாடுகளில் வசிக்கின்றனர்.

சிட்டாடலின் உலக ராணுவ ரகசியங்களடங்கிய ‘எக்ஸ் கேஸ்’ என்கிற பெட்டியை ‘மோண்டிகோர்’ தேட ஆரம்பிக்கிறது. சுமார் 8 ஆண்டுகளுக்குப் பின், ரிச்சர்ட் மடன், பிரியங்கா சோப்ரா தாங்கள் யாரென அறிந்த பின்,, ‘எக்ஸ் கேஸ்’ பெட்டி மாண்டிகோருக்கு கிடைக்காமல் தடுக்கவும்; ‘சிட்டாடல்’ அழிவிற்குப் பழி வாங்கவும், உலகைக் காப்பாற்றவும் கிளம்புகின்றனர். பிறகு என்ன நடக்கிறது...? என்பது கதை.

தமிழிலும் இதைக் காணலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com