விஜய் சேதுபதி வெளியிட்ட, ‘ஆதாரம்’ திரைப்பட டீசர்!

விஜய் சேதுபதி வெளியிட்ட, ‘ஆதாரம்’ திரைப்பட டீசர்!

‘MATINEE FOLKS’ நிறுவனம் சார்பில் G.பிரதீப்குமார், ஆப்ஷா மைதீன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கவிதாவின் இயக்கத்தில், புதுமுகங்கள் நடித்திருக்கும் அதிரடி ஹெய்ஸ்ட் திரில்லர் திரைப்படம், ‘ஆதாரம்.’ கண்கள் பார்க்கும் விஷயங்களில் விவரங்கள் குவிந்திருக்காது. அது எளிதில் மறந்து போகும். ஆனால், சிசிடிவியின் கண்கள், பார்த்த அனைத்தையும் சேமித்து வைக்கும். அழிந்து போகாது. இந்தக் கருவை மையமாகக் கொண்டு நகைக்கடை கொள்ளையின் பின்னணியில் உருவாகியுள்ள திரைப்படம்தான், ‘ஆதாரம்.’ இந்தப் படத்தில் புதுமுக நடிகர் அஜித் விக்னேஷ் நாயகனாக நடிக்க, பூஜா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ராதாரவி, Y.G.மகேந்திரன், கதிரவன் பாலு, அட்ரஸ் கார்த்திக் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படத்தின் டீசர் காட்சிகளை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இயக்குநர் PS மித்ரன், ஒளிப்பதிவாளர் PG முத்தையா மற்றும் இயக்குநர் S R பிரபாகரன் ஆகியோர் வெளியிட்டனர்! இது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடன் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் அதிகம் சொல்லப்படாத ஹெய்ஸ்ட் ஜானரில், காதல், கமர்ஷியல் அம்சங்கள் கலந்து, அனைவரையும் கவரும் வண்ணம் இப்படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்பட வசனங்களை கவிதா மற்றும் ராசி தங்கதுரை இணைந்து எழுதியுள்ளனர்.  N.S.ராஜேஷ் குமார் & ஶ்ரீவட்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளனர். டாய்ஸ்.M எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில், இறுதிகட்ட வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இப்படத்தின் டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
Kalki Online
kalkionline.com