ஓடிடியில் விஜய்சேதுபதியின் முதல் இந்திப்படம்!

பாலிவுட் பூமராங்!
ஓடிடியில் விஜய்சேதுபதியின் முதல் இந்திப்படம்!

மிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த முதல் படம் ‘மாநகரம்’ 2017ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் ஸ்ரீ, சந்தீப் கிஷன், ரெஜினா, சார்லி, மதுசூதன் ராவ், முனீஷ்காந்த் ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படத்தின் இந்தி ரீமேக்கான ‘மும்பை கர்’ படத்தை பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான சந்தோஷ் சிவன் இயக்கியுள்ளார்.  ஷிபு தமீன்ஸ் தயாரித் திருக்கிறார். இதில் விக்ராந்த் மாசே;  தன்யா மாணிக்டலா; சச்சின் கடேகர்; விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதி, தமிழில் முனீஷ்காந்த் நடித்திருந்த கேரக்டரில் நடித்து இருக்கிறார். விஜய் சேதுபதி நடித்துள்ள முதல் நேரடி இந்திப் படமான இதன் டிரைலரை லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் வெளியிட்டார்.

ஜூன் 2 ஆந்தேதி ‘மும்பை கர்’ படம் நேரடியாக ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.

மூன்று கான்களின் முக்கிய சந்திப்பு!

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களாக விளங்கும் மூன்று ‘கான்’களாகிய ஷாருக், சல்மான், அமீர் மூவருமே நல்ல நட்புடன் இருப்பவர்கள். ஒருவர் படத்தில் மற்றவர் சம்பளமே பெறாமல், சிறப்பு தோற்றத்தில் நடிப்பார்கள். ஷாருக்கானின் ‘பதான்’ படத்தில் சல்மான்கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். பொதுமேடைகளில் மூவரும் சேர்ந்து கலந்துகொண்டு உரையாடுவதுண்டு.

இவர்கள் சல்மான்கானின் கேலக்ஸி அபார்ட்மெண்டில் சமீபத்தில் சந்தித்துப் பேசிய விபரங்கள் பின்வருமாறு:

“இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 4 மணி வரை நீடித்த சந்திப்பில் பல்வேறு மலரும் நினைவுகளைப் பகிர்ந்துள்ளனர். மேலும், தற்போதைய சினிமா, அரசியல் நிலவரங்கள், மும்பை சினிமாவில் தாதாக்கள் ஆதிக்கம், போதைப் பொருள் பழக்கம் பற்றியும் பேசியிருக் கின்றனர்.

‘லால் சிங் சட்டா’ படத் தோல்விக்குப் பிறகு நடிப்பில் இறங்காமலிருக்கும் அமீர்கான் மறுபடியும் நடிக்க வேண்டுமென மற்ற இருவரும் கேட்டுக்கொண்டு உள்ளனர். தவிர, மூவரும் இணைந்து ஐரோப்பா அல்லது அமெரிக்கா செல்ல வேண்டும். பிரம்மாண்டமான ஒரு படத்தில் நடிப்பதோடு, பான் இண்டியா படமாக உருவாக்க வேண்டும். பாலிவுட் சரித்திரத்தில் முக்கியமானதாக இது இருக்க வேண்டும். இப்படி இவர்களின் சந்திப்பானது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சிறிது சிரித்தால் சரியாகும்!

முன்னணி மற்றும் பிரபலமான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் பிரியங்கா சோப்ரா, தனது 18ஆவது வயதில், கடந்த 2000ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டம் பெற்றார்.

‘தமிழன்’ தமிழ்ப் படத்தில் விஜய் ஜோடியாக ஹீரோயினாக நடித்தார். பின்னர் ஹிந்தியில் பல படங்கள். அந்தக் காலகட்டத்தின் மிகவும் பயந்த சுபாவமுடைய பெண்ணாக இருந்த காரணம், சிறு விஷயங்களைக்கூட சீரியஸாக எடுத்துக்கொண்டவராக இருந்ததை நினைவு கூறுகிறார். அவர் கூறியதாவது “மிகவும் சென்ஸிட்டிவ்வாக இருந்த காரணம், அடிக்கடி எமோஷனலாகி மனதளவில் காயமடைந்தேன். ஒவ்வொரு தோல்விக்குப் பிறகும், வாய்ப்புக்களைத் தவற விட்ட பின்பும், அதிலிருந்து மீள்வது எளிதாக இல்லை. நான் டீ.வி.யில் பார்த்து வளர்ந்து பெரிய நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்கையில் பயமாகவே இருந்தது.

அமெரிக்காவில் படிக்கையில் கூட, கேஃபேடேரியா செல்வது; டிரே எடுப்பது என எல்லாமே புதிதாக இருந்தது. வென்டிங் மிஷினிலிருந்து சிப்ஸ் பாக்கெட் எடுப்பது எளிதாக இருந்த காரணம், அதை எடுத்து வேக வேகமாக சாப்பிடுவது வழக்கம். நான் சொல்ல விரும்புவது –  “கொஞ்சம் சிரி! எல்லாம் சரியாகி விடும்!” என்பதுதான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com