அப்பாவுக்கு ஆபரேஷன்.. ஓடி வந்த விஜய்.. வைரலாகும் போட்டோஸ்!

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

விஜய் தனது தந்தையை சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது லியோ படத்தை முடித்துள்ள விஜய் அடுத்தபடியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். விஜய் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியானது. இதில் ஒன்று இளம் வயது கதாபாத்திரம் என்பதால், விஜய்யை இளமையாக காட்ட முடிவு செய்துள்ள வெங்கட் பிரபு, இதற்கான பணிகளுக்காக விஜய்யுடன் கடந்த மாதம் அமெரிக்கா சென்றார். இந்த நிலையில், கடந்த 12ஆம் தேதி அவர் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார்.

இதற்கிடையே இயக்குனரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் பேசிய ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. அதில் தனக்கு கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது என்றும் மருத்துவர் அறிவுரையின்படி ஸ்கேன் செய்து பிரச்சனையை கண்டுபிடித்த நிலையில், தான் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் இப்போது நலமுடன் இருப்பதாகவும் கூறினார்.

மேலும், அவர் நமக்கு பிரச்சனை வரும்போது இப்படி ஆயிற்றே என்று யோசிக்காமல் அடுத்து என்ன செய்யலாம் என யோசிப்பது நல்ல விஷயம். அது நம் மனதை பாசிட்டிவ்வாக வைக்க உதவும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார்.

இந்த நிலையில் அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சந்திரசேகரை நடிகர் விஜய் நேரில் சென்று சந்தித்தார். தனது தாயார் ஷோபா மற்றும் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருடன் அவர் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பல நாட்களாக தந்தைக்கும், மகனுக்கு பிரச்சனை நீடித்து வருவதாக பேச்சுக்கள் எழுந்து வந்தது. தற்போது தந்தையுடன் போட்டோ எடுத்து நடிகர் விஜய் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com