விஜயானந்த் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா!

விஜயானந்த் டிரெய்லர் வெளியீட்டு
விஜயானந்த் டிரெய்லர் வெளியீட்டு

கர்நாடகா மாநிலத்தின் ஒரு கிராமத்தில் ஒரு சிறு டிரக்கை வைத்து கொண்டு பிஸினஸ் ஆரம்பித்து 4,300 வாகனங்களுக்குச் சொந்தக்காரராக மாறிய  ஒரு மிகப்பெரும் சாதனையாளரின்  அசாதாரணமான வாழ்க்கைதான் ‘விஜயானந்த்’ திரைப்படம்.

பிரமாண்ட பட்ஜெட்டில் பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதியன்று தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

வணிக ரீதியிலான சாலைப் போக்குவரத்து வாகனங்களை இயக்கும் தொழிலில், இந்திய அளவில் முன்னணி நிறுவனமான விஆர்எல் எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்தத் திரைப்படத்தில் கதையின் நாயகனான விஜய் சங்கேஸ்வர் கதாபாத்திரத்தில் நடிகர் நிஹால் நடித்திருக்கிறார். இவருடன் ஆனந்த் நாக், ரவிச்சந்திரன், பாரத் பொப்பண்ணா, பிரகாஷ் பெலவாடி, ஸ்ரீ பிரகலாத், வினயா பிரசாத், அர்ச்சனா, அனிஷ் குருவில்லா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

முதல்வர் பசவராஜ் பொம்மை
முதல்வர் பசவராஜ் பொம்மை

கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை விஆர்எல் ஃபிலிம்ஸ் நிறுவனம், பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மையா கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

விழாவில் முதல்வர் பசவராஜ் பொம்மையா பேசியதாவது:

“நான் விஜயை 1985-ல் சந்தித்தேன். ஒரு சாகசக்காரராகத்தான் அவர் எனக்குத் தெரிந்தார். எப்பொழுதும் அவரிடம் ஒரு தாகம் இருக்கும், எப்பொழுதும் கிரியேட்டிவாக யோசிக்கக்கூடியவர்.  அவர் இதுவரை நடத்திய அனைத்துத் தொழில்களுமே லாபகரமானவைதாம். முடியாததை முடிப்பது தான் அவரது பாணி.

அவர் லோக்சபா எம்.பி. ஆக இருந்தார், அப்பொழுதும் நேரம் தவறாமைதான் அவரது பலம்.  அவரது கடின உழைப்பு அவருக்கு எல்லாத் துறைகளிலும் பலத்தைக் கொடுத்து இருக்கிறது.  அவர் எதைத் தொட்டாலும் வெற்றிதான்.

இந்தப் படம் பல மொழிகளில் வெளியாவது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. படம் மிகப் பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.”

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com