மீண்டும் விஜய் நடிக்கும் 'லியோ' படப்பிடிப்பு நிறுத்தம்! காரணம் தெரியுமா!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘லியோ' படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
'வாரிசு' திரைப்படத்தைத் தொடர்ந்து, தளபதி விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பும் சமீபத்தில் காஷ்மீரில் தொடங்கியது. அதற்கான புகைப்படமும் இணையத்தில் வெளியாகி இருந்தது.
இப்படத்தில், விஜய்யுடன், த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்ட முக்கிய நடிகர்களும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருவதால், இதர நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என தனி விமானத்தில் சென்று நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன் விஜய் நடித்த ஒரு காட்சியை யாரோ மொபைலில் படம்பிடித்து, இணைய தளத்தில் லீக்காக்கி அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த லோகேஷ் கனகராஜ் படப்பிடிப்பை நிறுத்தி இதுகுறித்து விசாரணை செய்தார். அதன்பின் படப்பிடிப்பு தளத்துக்கு மொபைல் கொண்டு செல்லவும் தடை விதித்தனர்.
அதைத் தொடர்ந்து, பாதுகாவலரின் சோதனைக்குப் பிறகே படக்குழுவினர் படப்பிடிப்பு தளத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் மீண்டும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
படக்குழுவை சேர்ந்த ஒருவரின் வீட்டில் நடந்த துக்க சம்பவம்தான், படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்ததற்கு காரணமாக கூறப்படுகிறது.