விஜய்
விஜய்

ஒரே நாளில் 5.7 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்த 'ரஞ்சிதமே'!

விஜய் குரலில் வெளியாகும் பாடல்களுக்கு எப்போதுமே அவரது ரகிகர்களிடையே பெரும் வரவேற்பு இருக்கும். அந்த வகையில் தமன் இசையில் இளைய தளபதி விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் 'ரஞ்சிதமே' என ஆரம்பிக்கும் இந்தப் பாடலும் பெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, சம்யுக்தா, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

வாரிசு
வாரிசு

தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை. இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. நிலையில் தற்போது ஃபர்ஸ்ட் சிங்கிளின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாள் அன்று வெளியாகவுள்ளது.

ரஞ்சிதமே - வாரிசு
ரஞ்சிதமே - வாரிசு

'ரஞ்சிதமே' என ஆரம்பிக்கும் இந்தப் பாடலை விஜய் மற்றும் மானஸி பாடியுள்ளார்கள். பாடலை எழுதியவர் பாடலாசிரியர் விவேகா. அவரது ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே உன்ன உதடு வலிக்க கொஞ்சனுமே’ என்ற பாடல் வரிகள் இளம் ரசிகர்கள் பலரையும் கவர்ந்துள்ளது .இந்த துள்ளிசை பாடல் விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது .இப்பாடலின் முழு லிரிக் வீடியோ வருகிற 5ஆம் தேதி வெளியாகும்.

நேற்று வெளியான இந்த பாடல் இதுவரை 5.7 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. வரும் நாட்களில் இன்னும் அதிகம் பேரால் இப்பாடல் ரசிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது .

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com