
நேற்று முன்தினம் விஜய்யின் 'வாரிசு' மற்றும் அஜித்தின் 'துணிவு' இரு திரைப்படங்களும் உலகெங்கும் வெளியாகியுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கிடையே ஒரே நாளில் இரண்டு மாஸ் ஹீரோக்களின் படங்கள் வெளிவந்ததால் இரு ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கும் எந்த குறையும் இல்லை.
அதேபோல் 'வாரிசு' திரைப்படம் டாப் கியரில் போகவில்லையென்றாலும், கலவையயான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ஆனால் 'துணிவு' திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைக் கொடுத்துள்ளதோடு, படம் பார்க்கும் அனைவரையும் கவர்ந்துள்ளது.
இந்நிலையில், சற்று வேதனைக்குரிய சம்பவம் தியேட்டரில் அரங்கேறி உள்ளது.
ஒரு தியேட்டரில், அஜித்தின் 'துணிவு' படத்தை ரசிகர்கள் பார்க்க வந்துள்ளனர். அப்போது படத்தின் இடைவேளை வந்தபோது, அந்நேரத்தில் விஜய்யின 'வாரிசு' திரைப்படப் பாடல் அங்கே ஒலித்துள்ளது. இதனால் கடுப்பாகிப் போன ரசிகர்கள் சிலர் திரையின் மீது செருப்புகளை வீசி அட்டகாசம் செய்துள்ளனர்.
அதுசம்பந்மான வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ...