விக்ரமின் 'தங்கலான்' லேட்டஸ்ட் புகைப்படம் அப்டேட்! வேற லெவல் மாஸ்!

விக்ரமின் 'தங்கலான்' லேட்டஸ்ட் புகைப்படம் அப்டேட்! வேற லெவல் மாஸ்!

'சியான்' விக்ரம் நடிப்பில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்திற்குப் பின் பா.ரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' படத்தில் விக்ரம் நடித்து வரும் நிலையில், இப்படத்தின் புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

பா. ரஞ்சித் இயக்கத்தில் 'சியான்' விக்ரம் நடிக்கும் படம் 'தங்கலான்'. இப்படத்தில் மாளவிகா மோகனன் விக்ரமிற்கு ஜோடியாக நடிக்க, பார்வதி திருவோத்து, பசுபதி, ஹரிகிருஷ்ணன் அன்புதுரை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கோலார் தங்கவயல் பகுதியை மைய்யமாக கொண்டு கதைகளம் இருப்பதால் இந்த தலைப்பை இப்படத்திற்கு வைத்துள்ளார் பா.ரஞ்சித்.

உடலை வருத்திக் கொள்வது முதல் சிக்ஸ் பேக் வைத்துக்கொள்வது வரை எப்படிப்பட்ட கேரக்டராக இருந்தாலும், வெளுத்து வாங்குவதில் கைதேர்ந்தவர் விக்ரம்.

அந்தவகையில், ஏற்கெனவே வெளியான இப்படத்தின் ஒரு போஸ்டரில், ஒரு விலங்கின் மீது கையில் அரிவாளுடன் விக்ரம் அமர்ந்து இருப்பது போன்ற காட்சி மிக வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளித்தது.

இந்நிலையில் தற்போது விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் 'தங்கலான்' படத்தின் புதிய புகைப்பட அப்டேட்களை பகிர்ந்துள்ளார்.

ஒரு ஆயுதத்தை கையிலேந்தியபடி தண்ணீருக்குள் இருக்கும்படியான அந்த புகைப்படத்தைப் பார்க்கும்போது ஒரு ஆக்ஷன் காட்சிக்கான தோரணை அந்த புகைப்படத்தில் தெரிகிறது.

தற்போது வெளியாகியுள்ள இந்த புகைப்படங்களும் மாஸ் கெட்டப்பில் இருப்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது. இந்நிலையில், விரைவில் இப்படத்தின் வேறு அப்டேட்களும் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com