“டிவிட்டர் ப்ளூ டிக் வேண்டுமா? பணம் கொடுங்க!

“டிவிட்டர் ப்ளூ டிக் வேண்டுமா? பணம் கொடுங்க!

பாலிவூட் பூமராங்!

டிவிட்டர் தளத்தில் திரையுலகினர், அரசியல் தலைவர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ கணக்கில் ப்ளூ டிக் பயன்படுத்தி வருகின்றனர். தற்சமயம் டிவிட்டர் நிர்வாகம் இந்த புளூ டிக்கிற்காக பயனாளர்களிடம் மாதந்தோறும் சந்தா தொகை வசூலிக்க முடிவு செய்துள்ளது.

டிவிட்டர் ப்ளூ விலை தளங்களில் மாறுபடுகின்றன. ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனில் மாதம் `900ம் மற்ற இணையத்தில் ஆண்டுக்கு` 6,800ம் செலவாகும்.

கடந்த 20ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்தாத டிவிட்டர்  கணக்கின் ப்ளூ டிக் அகற்றப்படும் என்று டிவிட்டர் நிறுவனர் எலான் மஸ்க் அறிவித்தார்.

சந்தா செலுத்தாத பல பிரபலங்களின் ப்ளூ டிக்கை டிவிட்டர் நிறுவனம் நீக்கிவிட்டது. பிரபலங்கள் ஷாருக்கான், சல்மான்கான், அமிதாப்பச்சன், அஜய் தேவ்கன் போன்றோர்கள் ப்ளூ டிக்கை இழந்துவிட்டனர். இவர்கள் இது குறித்து கவலைப்படவில்லை. இந்நிலையில், அமிதாப்பச்சனுக்கு ப்ளூ டிக்கட் மீண்டும் கிடைத்துள்ளது. இந்த சேவைக்காக ஏற்கெனவே பணம் செலுத்தியதாக பதிவிட்டுள்ளார். “நன்றி சகோதரரே!” என்று எலான் மஸ்க்கை குறிப்பிட்டுள்ளார்.

பணம் கொடுக்காத பல பிரபலங்களுக்கு, “ப்ளூ டிக்” இப்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது.

(“எல்லாமே Money! Money!”)

புதுப்பட வாய்ப்பு கிடைத்துவிட்டது!

மிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வந்த நடிகை பூஜா ஹெக்டேக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காத காரணம், தெலுங்கு படவுலகம், பாலிவுட் என்று கவனம் செலுத்தினார். எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் இருந்த நேரம், பாலிவுட் முன்னணி நடிகர் சல்மான்கனுடன் அவரை இணைத்து காதல் கிசுகிசுக்கள் வெளியாக டென்ஷனாகி விட்டார்.  அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியது “திரையுலகில் எனது 11 வருடப் பயணம். ரோலர் கோஸ்டர் ரைட் போல ரொம்ப ரிஸ்க்கானது. முதலிலேயே வெற்றி கிடைக்கவில்லை. பல கஷ்டங்களைத் தாண்ட வேண்டி இருந்தது. மன அழுத்தம் ஏற்பட்டது. தற்சமயம் திடீரென அனேக புதுப்பட வாய்ப்புகள் வர பிசியாகிவிட்டேன். என்னுடைய குடும்பத்தினர் யாரும் சினிமாவில் கிடையாது. சினிமாவை குடும்பமாக ஏற்றுக்கொண்டேன்.

சினிமாவில் மட்டுமல்ல; வேறெந்த துறையை எடுத்துக்கொண்டாலும், கஷ்டப்படாமல் முன்னுக்கு வர முடியாதென்பதே நிஜம்” சல்மான்கானுடன் “Kisi Ka Bhai Kisi Ki Jaan” படத்தில் நடித்தது கனவு போலிருக்கிறதென்கிறார் அம்மணி.

(நல்லதே நடக்கட்டும்!)

படுக்கையறை காட்சிகளில் உதவி!

லகளாவிய புலனாய்வுத் தொடரான ‘சிட்டாடல்’ ஏப்ரல் 28 ஆந் தேதி முதல் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. இத்தொடரில் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா சக நடிகருடன் படுக்கையறை காட்சிகளில் ஆபாசமாக நடித்துள்ளதாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பிரமோஷன் நிகழ்வில் கலந்துகொண்ட பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் மேடனுடான படுக்கையறை காட்சிகள் குறித்து சுவாரசியமான கருத்துகளை தெரிவித்து உள்ளார். அது “உண்மையில் திரையில் காண்பவர்கள் நாங்கள் அறையில் தனியாக இருப்போமென நினைப்பார்கள். ஆனால், அந்தப் படப்பிடிப்பறையில் இயக்குனர், காமிராமேன் உட்பட ஏராளமானோர் இருப்பார்கள் என்பது தெரியாது.

எந்த ஒருவித மன அழுத்தமுமில்லாமல் காட்சிகளைச் சிறப்பாக நடித்து முடித்தோம்” எனக் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com