”நாங்கள் ஆளனும்; நீங்கள் வாழணும்” - சீமானின் பேச்சுக்கு ராதாரவி ஒப்புதல்

”நாங்கள் ஆளனும்; நீங்கள் வாழணும்” - சீமானின் பேச்சுக்கு ராதாரவி ஒப்புதல்

”காதல் - கண்டிஷன்ஸ் அப்ளை” என்ற படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடந்தது. மஹத் ராகவேந்திரா, சனா மகபூல் நடித்துள்ள இந்த படத்தை R. அரவிந்த் இயக்குகிறார். ரவீந்திரன் சந்திரசேகர் தயாரிக்கிறார். 

விழாவில் பேசிய மதன் கார்கி "இப்போது அனைத்து வேலைகளையும் செய்ய இயந்திரங்கள் வந்து விட்டன. இன்னமும் ஐந்து வருடங்களுக்கு பிறகு சினிமாவில் நல்ல கதை வேண்டும், திரைக்கதை வேண்டும், வசனம் வேண்டும் என்றால் கூட ரோபோ போன்ற இயந்திரங்கள் வந்து விடும். தற்சமயம் இயற்கை விவசாய காய் கனிகளுக்கு டிமாண்ட் இருப்பதை போல, இயந்திரம் இல்லாத, மனிதர்கள் தரும் கதை திரைக்கதைக்கு டிமாண்ட் இருக்கும் எதிர் காலத்தில் இயந்திரங்கள்தான் நமக்கு போட்டியாக இருக்கும்” என்றார்.

ராதாரவி பேசுகையில் "நான் தெலுங்கை தாய் மொழியாக கொண்ட தெலுங்கன்தான். ஆனால் என்னை வாழ வைப்பது தமிழ் மண்ணும், தமிழர்களும்தான். ’நாங்கள் ஆளணும், நீங்கள் வாழணும்’ என்று சீமான் சொல்வது எனக்கு பிடித்துள்ளது. முன்பெல்லாம் எங்களை வந்தேறிகள் என்றார்கள். இப்போது சொல்வதில்லை. அனைத்து தொழில்களிலும் வட இந்தியர்களின் ஆதிக்கம் பரவி வருகிறது.நம் தமிழர்களுக்கு வாய்ப்பு தாருங்கள்.  இல்லை எனில் சினிமாவில் உள்ள இருபத்தி  இரண்டு துறைகளிலும் வட மாநித்தவர்கள் நுழைந்து விடுவார்கள். மதன் கார்கி சொல்வது போல இயந்திரங்கள் முன் என்னால் நடிக்க முடியாது. இப்படி ஒரு நிலை வருவதற்கு முன் நான் இறந்து விட வேண்டும். பெற்றோர்களை எந்த காரணமும் கொண்டும் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடாதீர்கள். இதை ஒரு வேண்டுகோளாக நான் உங்கள் முன் வைக்கிறேன். லவ் டுடே படம் போல காதல் -கண்டிஷன்ஸ் அப்ளை (conditions apply) படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள் " என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com