என்ன ஒரு ப்ளான்... ஷாருக்கானை பக்கவாக பயன்படுத்திய ஆர்யன் கான்!

என்ன ஒரு ப்ளான்... ஷாருக்கானை பக்கவாக பயன்படுத்திய ஆர்யன் கான்!

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ஷாருக்கான். இவரது படங்கள் பாலிவுட்டில் மட்டுமல்ல, தென்னிந்திய திரையுலகிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இவர், தற்போது இளம் இயக்ககுநரான கோலிவுட்டைச் சேர்ந்த இயக்குநர் அட்லியின் இயக்கத்தில் 'ஜவான்' என்ற பாலிவுட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

காரணம், ஷாருக்கான் நடிப்பில், சமீபத்தில் வெளியான 'பதான்' திரைப்படம் உலக அளவில் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்து உலக அளவில் ஷாருக்கானுக்கு நற்பெயரை வாங்கிக்கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அவருக்கான மார்க்கெட்டையும் பல மடங்கு உயர்த்தியுள்ளது.

ஷாருக்கானின் மார்க்கெட் ஒரு பக்கம் எகிறிக்கொண்டிருக்க, அவரது மகன் ஆர்யன் கான், கடந்த வருடம் சில பிரச்சினைகளில் மாட்டிக்கொண்டு, பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் சம்பந்தப்பட்ட செய்திகள் எது வெளியானாலும், அவை பரபரப்பாகவே பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில், இவர் தற்போது செய்துள்ள விஷயம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

ஆர்யன் கானுக்கு சினிமாவில் நடிப்பதைக் காட்டிலும், இயக்குநர் ஆவதற்கு அதிக விருப்பம் இருப்பதாக ஏற்கெனவே கூறப்பட்டுவந்தது. அதன்படி, ஆர்யன் கான், உச்சத்தில் இருக்கும், தனது தந்தை ஷாருக்கானை வைத்து ஒரு பிரபல நிறுவனத்திற்காக விளம்பரம் ஒன்றை இயக்கியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், இந்த விளம்பரத்தை தனது தந்தையின் நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவன தயாரிப்பின் கீழ், இயக்கியுள்ளார்.

தற்போது, ஷாருக்கானின் மார்க்கெட் உச்சத்தில் இருப்பதால், பல விளம்பர நிறுவனங்களும் ஷாருக்கானை வைத்து விளம்பரங்களை எடுக்க முனைப்பு காட்டுவதால், ஆர்யன் கான் தனது தந்தையை வைத்தே விளம்பரங்களை எடுக்கவும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com