என்னாச்சு ப்ரியங்காவுக்கு! அதுவும் நடுரோட்டுல...
சின்னத்திரையில், பிரபல தொகுப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் தற்போது, நடுரோட்டில் ரஜினி பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
தொலைக்காட்சி சேனலில், பிரபல தொகுப்பாளராக வலம் வரும் பிரியங்காவின் நக்கலான பேச்சு, நகைச்சுவை உணர்வு என அவரது ஒவ்வொரு செயலுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
பிரியங்கா, தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தாலும், சமூகவலைதளங்களிலும் படுபிஸியாக செயல்பட்டு வருகிறார்.
அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு இருக்கும் ரசிகர் கூட்டத்தைப்போலவே, சமூக வலைதளப் பக்கத்திலும் தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகப்பட்டாளத்தை வைத்துள்ளார்.
அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 3 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்கள் பின்தொடர்கிறார்கள்.
அதில் அவர் பதிவிடும் நகைச்சுவை வீடியோ, புகைப்படங்கள் என ஒவ்வொன்றும், லட்சம் பார்வைகளைத் தாண்டிவிடும்.
அந்தவகையில், இன்று பிரியங்காவுக்கு 31 வயது ஆனதையொட்டி, தற்போது அவர் லண்டனில் தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.
இந்நிலையில், லண்டன் ரோட்டில் 'பேட்ட' படத்தில் ரஜினி துப்பாக்கியை எடுத்து வில்லனை சுடும் போது பேக்ரவுண்ட் மியூசிக்கில் ரஜினி ஒரு ஆட்டம் போடுவதுபோல்... அதே மியூசிக்கிற்கு மகிழ்ச்சியுடன் குத்தாட்டம் போட்டபடி தனது 31 வயது பிறந்தநாளை வெளிப்படுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவரது இந்த ஆட்டத்தை ரசித்த பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.