அகில உலக சூப்பர் ஸ்டாருன்னா என்ன? செய்தியாளர் சந்திப்பில் மிர்ச்சி சிவா தந்த விளக்கம்!

அகில உலக சூப்பர் ஸ்டாருன்னா என்ன? செய்தியாளர் சந்திப்பில் மிர்ச்சி சிவா தந்த விளக்கம்!

மிர்ச்சி சிவா நடிப்பில் சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் என்றொரு திரைப்படம் வெளிவரவிருக்கிறது. இத்திரைப்படத்தின் அறிமுக விழாவுக்கான செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மிர்ச்சி சிவாவிடம் செய்தியாளர் ஒருவர்;

ஏற்கனவே அடுத்த சூப்பர் ஸ்டார் குறித்த சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கிறது. இப்போது நீங்கள் அகில உலக சூப்பர் ஸ்டார் என்கிறீர்களே? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு மிர்ச்சி சிவா தன் பாணியில் அளித்த பதில்;

‘ஏங்க... அதெல்லாம் சூப்பர் ஸ்டார்னா அவர் ஒருத்தர் தான். அவர் லெஜண்ட். சூப்பர் ஸ்டார் பிரச்சினையெல்லாம் இந்தியா, தமிழ்நாடு , இந்த உலகம் , இந்த எர்த் அது சம்மந்தப்பட்டது சார். அகில உலகம் அப்படின்னா பில்லியன்ஸ் ஆஃப் கேலக்ஸி, அதாவது ஆல்ரெடி பெரிய பெரிய கேலக்ஸி இருக்கு... ப்ளாக் ஹோல் தெரியுமா உங்களுக்கு? நாம் இப்ப அந்த பிளாக் ஹோலுக்கு பக்கத்துல போயிட்டோம். சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கெல்லாம் எப்பவுமே போட்டியே கிடையாது. அது அவர் ஒருத்தர் தான். என்னைக்குமே சூப்பர் ஸ்டார் ரஜினி தான்’.- என்றார்.

மேலும் ‘சார் இந்தப் பட்டமெல்லாம் நான் கேட்டா கொடுத்தாங்க, அதெல்லாம் இல்லை சார், அவங்களா கொடுக்கறாங்க. எந்த ஸ்டேஜ் ஏறினாலும் அகில உலக சூப்பர் ஸ்டார்னு சொல்லுவாங்க. ரெண்டு ஸ்டெப் டான்ஸ் ஆடுங்கன்னு சொல்வாங்க. இதெல்லாம் பிரபு தேவா மாஸ்டரையே கேட்கறாங்களோ இல்லையோ? நான் போன அட்லீஸ்ட் ரெண்டு ஸ்டெப் ஆடுங்கன்னு கேட்கறாங்க.’

- என்றும் விளக்கம் சொன்னார்.

சிவா தந்த இந்த விளக்கத்தைக் கேட்டு செய்தியாளர் சந்திப்பில் சிரிப்பு களை கட்டியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com