இது என்ன குல்பி சண்டையா? டெல்லியை தெறிக்கவிட்ட சோழர்கள்!
'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம் உலகளவில் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்திற்கான ப்ரமோஷன் வேலைகளும் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், சமீபத்தில் குல்பியுடன சோழர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி படு வைரலாகி வருகிறது.
கடந்தாண்டு லைகா நிறுவனம் மற்றும் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. வரலாற்றுப் பின்னணியை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.
இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா, விக்ரம் பிரபு, அஸ்வின், சரத்குமார், பார்த்திபன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இந்நிலையில், இப்படத்தின் 2ம் பாகம், ஏப்ரல் 28ம் தேதி உலகெங்கும் வெளியாகவிருக்கிறது. இதையடுத்து, தற்போது இப்படத்திற்கான புரமோஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.

அதன்படி, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா உள்ளிட்ட அனைவரும் ஊர் ஊராக சென்று ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகின்றனர். அவ்வப்போது அதுகுறித்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதன்படி, தற்போது, டெல்லியில் ப்ரமோஷன் வேலைகளில் அவர்கள் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா என ஜாலியாக குல்பியை ருசித்தபடி இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

அதே சமயம் வந்தியத்தேவனும், சோபிதாவும் குல்பியை வாளாக மாற்றி வாள் சண்டை போடுவது ரசிக்கும்படியாக உள்ளது.

கொளுத்தும் வெயிலிலும் எதையும் பாராமல், ப்ரமோஷனில் ஈடுபட்டு வரும் இவர்களை இந்த குல்பிதான் சில் செய்துள்ளது.
ப்ரமோஷன் வேலைக்காக படுபிஸியாக ஊர் ஊராக சுற்றி வரும் சோழர்கள் தற்போது அங்கிருந்து அடுத்ததாக கொச்சினுக்கு பறந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.