என்னாச்சு இவருக்கு... ரோபோ சங்கர் புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்!
காமெடி நடிகராக வெள்ளித்திரையில் கலக்கிவரும் ரோபோ சங்கர் ஒல்லியான தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியானதையடுத்து, அந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும அதிர்ச்சியில் உள்ளனர்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கலக்கப் போவது யாரு?' நிகழ்ச்சியின் போட்டியாளராக அறிமுகமாகி, பின்னர் மெல்ல மெல்ல சினிமாவிலும் நுழைந்து, ரசிகர்களின் ஆதரவோடு, சிறந்த காமெடி நடிகராகவும் வலம் வருகிறார்.
இவரது காமெடிக் காட்சிகள் அனைவருக்கும் பிடித்துப்போகவே, தனுஷ் நடிப்பில் 'மாரி', விஜய் நடிப்பில் 'புலி', 'சரவணன் இருக்க பயமேன்', 'இரும்புத்திரை', 'மாரி 2' என வரிசையாக முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து தற்போது பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். காமெடி நடிகராக வலம் வந்தாலும், விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
இவரது மகள் இந்திரஜாவும் தற்போது சினிமாவில் காலடி பதித்துள்ளார். தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமான இவர், தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். அதைத் தொடர்ந்து 'விருமன்' படத்திலும் நடித்திருந்தார். அதன்பின் இந்திரஜாவுக்கும் பட வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.
அந்தவகையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்துவரும் இந்திரஜா அவ்வப்போது தனது தந்தையுடன் சேர்ந்து ரீல்ஸ் வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ ஒன்றில், ரோபோ சங்கர் உடல் நன்கு இளைத்து மெலிந்த தோற்றத்தில் காணப்படுகிறார். இதைக் கண்ட ரசிகர்கள் பலரும் ரோபோ சங்கரின் உடல் குறித்து, படத்திற்காக உடல் எடையைக் குறைத்துள்ளாரா? அல்லது ஏதேனும் உடல்நல பாதிப்பா என சந்தேகத்தில் இருப்பதோடு, அவரது உடல் நலன் குறித்து தங்கள் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
தற்போது உடல் இளைத்து ஒல்லியாக இருக்கும் ரோபோ சங்கரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.